Friday, April 17
Shadow

நடிகை பத்மா லட்சுமி பிறந்த தின பதிவு

பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருஷ்டி ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும், உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.