Sunday, March 23
Shadow

நடிகை பத்மினி பிரியதர்சினி பிறந்த தின பதிவு

பத்மினி பிரியதர்சினி என அழைக்கப்பட்ட பத்மினி இராமச்சந்திரன் ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார். 1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பத்மினி பிரியதர்சினி கேரள மாநிலத்தில் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். பின்னர் பெங்களூரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அகாதமி விருது பெற்ற லைஃப் ஒஃப் பை (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார்.

நடனக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சகோதரி படத்தில் ஆனந்தக்கோனாரின் (ஜே. பி. சந்திரபாபு) முறைப்பெண்ணாகவும், பாலாஜியை மயக்குபவராகவும் பால்காரி வேடத்தில் நடித்தார்.

பாத காணிக்கை படத்தில் சந்திரபாபுவின் ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்: நெஞ்சம் மறப்பதில்லை, பாத காணிக்கை, சகோதரி, தேனிலவு, பாக்தாத் திருடன், பெற்ற மனம், தெய்வபலம், இரத்தினபுரி இளவரசி, இருவர் உள்ளம், மகாலட்சுமி, தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை, விடிவெள்ளி, அன்னையின் ஆணை, இரு சகோதரிகள், பக்த மார்க்கண்டேயா