
ஆஷா போஸ்லே ஒரு இந்திய பாடகியாவார். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு, அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.
தெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார் — அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள். அவர் 14 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார், அவற்றில் ஆஸ்ஸாமீஸ், ஹிந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, பெங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம், ரஷ்ய மொழி, செக் மொழி, நேபாளி, மலாய் மொழி மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் அடங்கும்.
போஸ்லே அவர்கள் 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாக அறியப்படுகிறது. 1974-1991 ஆண்டுகளில்,கின்னஸ் புக் ஓப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் என்ற புகழ்பெற்ற புத்தகப்பதிப்பில், அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கர் உலக அளவில் மிகவும் அதிகமான பாடல்களை பாடியதற்கான ஒரு இடத்தை அந்த புத்தகத்தில் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற ஆதாரங்களை பதிவு செய்யும் நிறுவனங்கள் இதை உண்மையானதாக ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் கின்னஸ் ஏற்றுக்கொண்ட எண்ணிக்கை கணக்கு மிகைப்படுத்திய ஒன்றாகும் என்றும் மேலும் போஸ்லே அவர்கள் லதா மங்கேஷ்கரை விட அதற்கும் மேல் பாடல்கள் பாடியுள்ளதாகவும் உரிமை கொண்டாடுகின்றன. போஸ்லே அவர்களே மற்ற எந்தப்பாடகியையும் விட அதிகமான பாடல்களைப் பாடிப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் – 12,000 பாடல்கள்.
ரங்கீலா (1994) என்ற வெற்றிப்படத்தின் மூலம் ஆஷா போஸ்லே அவர்கள் திரும்பவும் திரைப்படங்களில் பாடவந்ததற்கு ஏ.ஆர். ரஹ்மான் காரணமாவார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற பாடல்கள் வெற்றிக்கொடி நாட்டின. அவர் மற்றும் ரஹ்மான் இருவரும் கூட்டாக முஜே ரங் தே (தக்ஷக்), ராதா கைஸே ந ஜலே (லகான், உதித் நாராயணுடன் இணைந்து பாடிய டூயட்), கஹின் ஆக் லகே (தால்), ஓ பன்வாரே (தாவுத், [கே. ஜே. யேசுதாS கே. ஜே. யேசுதாசுடன்) இணைந்து பாடிய டூயட், வெண்ணிலா வெண்ணிலா (இருவர் ,1999) போன்ற பல வெற்றிப்பாடல்களை அளித்தனர். ரஹ்மான் ஒருமுறை கூறியது, “நான் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றார் போல் நல்ல பாடல்களுக்கு இசை அமைக்கும் பொழுது மட்டுமே நான் அவர்களைப்பற்றி நினைப்பேன் (லதா மற்றும் ஆஷா)”
