
ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். என்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது துணை கதாப்பாத்திரத்திலும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணிபுரிகின்றார். கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, “பொட்டு அம்மன்” என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.

தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் “உள்ளத்தை அள்ளித்தா.” இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் “பரம்பரை”, விஜயகாந்துடன் “தமிழ்ச்செல்வன்” என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” படம் போக்கிவிட்டது.
வேலுபிரபாகரன் இயக்கிய “கடவுள்” படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார். ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் “வீரா.”
ரஜினியுடன் `உழைப்பாளி’ படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா’ படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா. ரோஜாவின் நூறாவது படம் “பொட்டு அம்மன்.”

சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. “நதி எங்கே போகிறது” என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார். அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.
இவர் நடித்த திரைப்படங்கள்
கில்லாடி, மாசாணி, சகுனி, காவலன், எல்லாம் அவன் செயல், மாயாவி, நெஞ்சினிலே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
