Friday, April 17
Shadow

விஜய் 63 கதை அட்லீ எழுதும் கதையா இப்பவே எழுந்த கேள்வி

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் மிக பெரிய பஞ்சாயத்து என்றால் அது கதை திருத்து தான் அதற்கு முக்கிய உதாரணம் சர்கார் அடுத்து விஜய் சேதுபதியின் 96 போன்ற படங்களுக்கு மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் பொதுவாக இயக்குனர் அட்லீ எழுதும் கதையே சில படங்களுக்கு ஒப்பிட்டு பேசுவார்கள் இதனால் நெட்டிசன்கள் இப்பவே அட்லீயை கதையை அவர் தான் எழுதுகிறார என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

இயக்குனர் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதில் பெரிய ஆச்சரியம் இல்லை. “தெறி, மெர்சல்” ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது திரும்பவும் இணைந்துள்ளார்கள். முந்தைய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் சிவா, அஜித் கூட்டணியைக் கிண்டலடித்த மாதிரி இந்த அட்லீ, விஜய் கூட்டணியை யாரும் கிண்டலடிக்கவில்லை.

இருந்தாலும் அட்லீயின் கதையைப் பற்றித்தான் கிண்டலடிப்பார்கள். ‘ராஜா ராணி’ படத்தை ‘மெளன ராகங்கள்’ படத்தின் காப்பியாகவும், ‘தெறி’ படத்தை ‘சத்ரியன்’ படத்தின் காப்பியாகவும், ‘மெர்சல்’ படத்தை ‘அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம்’ காப்பியாகவும் அட்லீ உருவாக்கியிருந்தார் என்று பலமான விமர்சனம் எழுந்தது.

இப்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ள படத்திற்கு ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்தக் கதையாவது அட்லீ சொந்தமாக எழுதியுள்ள கதையா அல்லது முந்தைய தமிழ்ப் படங்களின் காப்பியா என சமூக வலைத்தளங்களில் இப்போதே கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்