
வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.
வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.
கன்னடாவில் மாணிக்யா, மலையாளத்தில் கசாபா ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் நடித்த தாரை தப்பட்டை திரைப்படம் வரலட்சுமிக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது.
நிபுணன், அம்மாயி, விக்ரம் வேதா, சத்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைபடங்கள்
டேன்னி, கன்னித்தீவு, வர்கம், நீயா 2, காட்டேரி, கன்னி ராசி, மத கஜ ராஜா, அம்மாயி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், Mr. சந்திரமௌலி, சர்கார், சண்டகோழி 2, மாரி 2, நிபுணன், சத்யா, தாரை தப்பட்டை, போடா போடி
