
கடந்த வெள்ளிகிழமை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்,சமுத்திரகனி,அமீர்,சுப்பிரமணி சிவா,கிஷோர்,பாலாஜி டேனியல் ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் தனுஷ் கனவு படம் வடசென்னை இந்த படம் விமர்சன ரீதியாக பெறும் வரவேற்ப்பை பெற்றது அதோடு வர்த்தக ரீதியாக சிட்டியை தவிர மற்ற எரியாகளில் படம் பெரிதாக வரவேற்புகிடைக்கவில்லை
இந்த படம் வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தை வெளிபடுத்தும் விதமாக அமைந்தது ஆனால் அவர்களின் ஒரு சில பகுதிகளை அதவாது அரு சிலர் செய்யும் காரியங்களை அந்த பகுதி மக்கள் அனைவரும் இப்படி தான் என்று சொல்லும் விதமாக கதைக்களம் அமைந்தது அதோடு அனைவரும் ரவுடிகள் மாதிரியும் அங்கு உள்ள பெண்கள் அனைவரும் மிக மோசமான வார்த்தைகள் அனைவரும் பேசும் படி அமைத்துள்ளது இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் கோவமாக உள்ளனர் அவர்களின் வருத்தத்தை மிகவும் அமைதியாக கூறிவந்தனர்.
இதற்கிடையில் சென்னையை சேர்ந்த சார்லஸ் என்ற வழக்கறிஞர் பொது நலமாக இயக்குனர் வெற்றிமாறன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகர் தெரிவித்துள்ளார் இவர் வடசென்னை பகுதியை சார்ந்தவர் இல்லை இருந்தும் வடசென்னை தென் சென்னை என்று பிரிப்பது தவறு எல்லோரும் சென்னையை சேர்ந்தவர்கள் தான் அதோடு ஒரு பகுதி மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் தான் இந்த படம் என்று கூறுகிறார் .
இதில் அவரின் புகார் நகல் இணைக்கப்பட்டுள்ளது.


