
‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு புதிய அதிரடி கூட்டணி: ஜெய்–பிரியங்கா மோகன்–யோகி பாபுவுடன் களமிறங்கும் ‘ஏஜிஎஸ் 29’
தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘ஏஜிஎஸ் 29’ படத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29-வது தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் செப்டம்பர் 6 அன்று நடைபெற்றது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ படத்தை இயக்கியவர் எம்.எஸ். ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், இயக்குநரும் நடிகருமான ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

முழுக்க முழுக்க பரபரப்பும் வேகமும் நிறைந்த அதிரடி திரில்லராக உருவாகும் ‘ஏஜிஎஸ் 29’, அதே நேரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் நகைச்சுவை மற்றும் பல சுவாரஸ்யமான அம்சங்களையும் கொண்டிருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், “தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இந்தப் படம் உருவாகும். அதிரடி மற்றும் திரில்லர் அம்சங்கள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும். அதே சமயம் நகைச்சுவை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் போன்ற முன்னணி நிறுவனத்திற்காக இந்தப் படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது,” என்றார்.
படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது. சென்னை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பொறுப்பேற்றுள்ளனர்.

‘கேஜிஎஃப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றதுடன், சமீபத்திய ‘பிளாஸ்ட்’ படத்திற்கும் இசையமைத்த ரவி பஸ்ரூர், ‘ஏஜிஎஸ் 29’ படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற்கொள்கிறார். பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பாளராகவும், எஸ். கண்ணன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு வடிவமைக்கிறார்.
தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். விளம்பர வடிவமைப்பை டூனி ஜான் மேற்கொள்கிறார்.
‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு, வலுவான நடிகர் பட்டாளம், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் அதிரடி திரில்லர் களத்துடன் உருவாகவிருப்பதால், ‘ஏஜிஎஸ் 29’ மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
After ‘Blast’ Success, AGS Entertainment Launches Its 29th Production with Jai, Priyanka Mohan and Yogi Babu
Following the blockbuster success of ‘Blast’, leading South Indian production house AGS Entertainment has officially launched its next ambitious venture, tentatively titled ‘AGS 29’.
The pooja ceremony for the production house’s 29th film was held in Chennai on September 6. The film is produced by Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh, and will be directed by M.S. Anandan, best known for directing Vishal’s action thriller ‘Chakra’.
The film brings together Jai, Priyanka Mohan and Yogi Babu in the lead roles. The supporting cast includes filmmaker and actor Rajiv Menon, veteran actor Nassar, G.M. Sundar, Ramesh Thilak and Arul Doss in significant roles.
Billed as a high-octane action thriller, ‘AGS 29’ promises to keep audiences engaged from beginning to end. Along with intense action and thriller elements, the film will also feature comedy and other entertaining ingredients.
Speaking about the project, director M.S. Anandan said, “The film will be an edge-of-the-seat action thriller that will keep the audience engaged from start to finish. While action and thrills will form its core, the film will also have comedy and other entertaining elements in the right measure. I am extremely happy and excited to be directing this film for AGS Entertainment.”
The shooting of the film is scheduled to begin on September 10 and will take place across Chennai, Ooty and other locations.
Archana Kalpathi serves as the Creative Producer, while Aishwarya Kalpathi is the Associate Creative Producer. S.M. Venkat Manickam is the Executive Producer.
The technical team includes acclaimed composer Ravi Basrur, known for his work in the ‘KGF’ franchise and the recent ‘Blast’, as the music director. Bala Subramaniem handles cinematography, while Pradeep E. Raghav takes charge of editing. S. Kannan is the art director and Phoenix Prabu will choreograph the action sequences.
Costume design is handled by Dinesh Manoharan, Pallavi Singh and Selvi Thangaraj, while Tuney John is in charge of publicity design.

With a strong ensemble cast, an experienced technical team and an action-packed storyline, ‘AGS 29’ marks another major addition to AGS Entertainment’s growing slate of films. More details about the project, including its official title and release plans, are expected to be announced in the coming months.
