Tuesday, April 21
Shadow

பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடக்கம்: தனுஷ் தகவல்

வட சென்னை வெற்றி மாறன் மற்றும் தனுஷ் இந்த இவர்களின் கனவு படம் என்று தான் சொல்லனும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று மிகவும் நேரம் செலவழித்து இந்த படத்தை உருவாக்கிறார்கள் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படத்தை பற்றி பலவதந்திகள் வருகிறது ஆரம்பதிலேருந்தே காரணம் இந்த படம் ஆரம்ப கட்டத்தில் இருந்து எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு ஆரம்பிக்க பல வருடங்கள் பின்னர் ஆரம்பித்தனர் ஆனால் குறுகிய காலத்தில் படபிடிப்பு நிறுத்தம் மீண்டும் ஆரம்பிக்க பல நாட்கள். பின்னர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார் அதற்கு அப்புறம் சமந்தா இந்த படத்தில் இருந்து விலகிகொண்டார். இத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்த படம் மீண்டும் படபிடிப்பு ஆரம்பம் என்று ஒரு சந்தோஷ செய்தி வெளியாகின்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வடசென்னை’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வந்தார்கள்.

கடந்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஆனால், ‘வடசென்னை’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘ப.பாண்டி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் தனுஷ். இதனால் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று கேள்வி எழுந்தது.

‘ப.பாண்டி’ வெளியாகவுள்ள நிலையில் தனுஷ், “பவர் பாண்டி இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், வட்சென்னை படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரியன், கடல், பெரிய மனிதர்கள் அப்புறம் வெற்றிமாறனுக்கே உரித்தான படப்பிடிப்பு தளங்கள் என படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply