
‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விஸ்வாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விஸ்வாசம்’ படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
அஜித்தின் விவேகம் முடிந்து ஒரு வருடங்கள் மேல் ஆகிறது இவரின் அடுத்த படம் விஸ்வாசம் என்று சொல்லி படபிடிப்பு இப்போ அப்போ என்று தள்ளிபோகொண்டே இருக்கிறது தற்போது மீண்டும் படபிடிப்பு தள்ளிபோகிறது காரணம் தற்போது நடக்கும் சினிமா வேலை நிறுத்தம் தானாம் ஓகே இவ்வளவு நாட்களாக ஏன் படபிடிப்பு இன்னும் ஆரம்பம் ஆகவில்லை என்றால் படக்குழுவின் சார்பாக இதுவரை எந்த வித பதிலும் இல்லை சரி தற்போது படபிடிப்பு yen தள்ளிபோகிறது என்று பார்ப்போம்
