அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல-57 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது பல்கேரியாவில் முக்கியமான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்திற்காக அஜித் பைக் வீலிங் செய்வதுபோன்ற ஒரு காட்சி தற்பாது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யேகமான பைக்கில் அஜித் அந்த சாகத்தை செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அஜித் பைக் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கெனவே, ‘ஆரம்பம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இவரே பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
அஜித் பைக் வீலிங் செய்தபோது எடுத்த வீடியோ…