Saturday, June 27
Shadow

தளபதியுடன் இணைய துடிக்கும் தல இயக்குனர்

சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் உருவான விவேகம், விஸ்வாசம் இரண்டு படங்களை இயக்கிய சிவா, தற்போது மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அஜித் நடித்த மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா, இம்முறை தளபதி விஜய்யை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர்முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தெரிகிறது. சிவாவிடமும் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவாவின் கதையில் விஜய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஒருவேளை விஜய் ஓ.கே., சொன்னால், அஜித், விஜய் என இருவரின் படங்களையும் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா, பேரரசு போன்ற இயக்குனர்கள் பட்டியலில் சிவா இணைவார்.