Sunday, June 28
Shadow

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

கஜ புயல் நிவராண நிதிக்கு ஒரு பக்கம் எல்லாரும் ஒன்று திரண்டு கொண்டு இருக்கும் நேரத்தில் அஜித் எந்த வித உதவி செய்யவில்லை இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் அவரின் மேனஜர் சுரேஷ் சந்திராவிடம் மோதி கொண்டு இருகிறார்கள்.

பொதுவாக அஜித் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என்று அறிந்த விஷயம் நாம் அறிந்த விஷயம் அப்படி இருக்கும் அஜித் டெல்டா பகுதி மக்கள் அதுவும்னம் நாட்டுக்கு சோறு போடும் மக்களுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு செவி சாய்க்காமல் இருப்பது ஏன் இது தான் அவரின்கருணை உள்ளமா

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.

அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்புவது என்று ஆறுதல் கரம் நீட்டினர்.

நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ஐம்பது இலட்சம் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனம் ஒரு கோடி, ரஜினி 50 இலட்சம் ,விஜயசேதுபதி 25 இலட்சம், விக்ரம் 25 இலட்சம், சிவகார்த்திகேயன் 20 இலட்சம் உதவிகள் செய்தனர்.

விஜய் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் அனுப்பி உதவிகள் செய்யச் சொன்னார்.

கமல் நேரடியாக களத்துக்குப் போனார். சிம்பு தன் ரசிகர்கள் மூலம் உதவி செய்வதாக சொன்னார். விஷால், கார்த்தி ரசிகர்களும் உதவிப்பணியில் ஈடுபட்டிருக்கிறாரகள்.

இயக்குநர் ஷங்கர் உட்பட ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகள் செய்து வருகிறார்கள்.

முன்னணி நடிகர்களான அஜித், தனுஷ் ஆகியோர் இதுவரை இதுபற்றிப் பேசவில்லை.

பல கோடி சம்பளம் வாங்கும் இவர்கள் இப்பேரிடர் குறித்து வாய் திறக்காத்தால் அவர்களின் ரசிகர்களே நொந்து போயிருக்குறார்களாம்.

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் பணிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் எதுவும் பேச முடியாத கலக்கத்தில் இருக்கிறார்களாம் அஜித் ரசிகர்கள். இதனால் அவர்களுக்குள்ளேயே பெரிய மோதல் வெடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது

இதே போல கேரளா வெள்ளதுக்கும் எந்த வித உதவியும் செய்யவில்லை அதோடு தற்போது அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ஏதோ மோதல் உருவாகி இருப்பது மேலும் வருத்தத்தை தருகிறது.

அஜித்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று தொலைபேசியில் அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டபோது ரசிகர்களை திட்டிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.