Sunday, October 6
Shadow

அஜித்தை பார்க்க அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம்

தல 57 படுவேகமாக படபிடிப்பு நடந்துவருகிறது முதல் கட்ட படபிடிப்பை ஐரோப்ப்பியாவில் முடித்து அடுத்த கட்ட படபிடிப்பை சென்னையில் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தனர் அனால் அங்கும் ஒரு பிரச்னை

இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் அஜீத்தின் 57 வது பட ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. முதல் ஷெட்டியூலை வெளிநாட்டில் முடித்தவிட்டு சென்னை திரும்பிய டீம், இரண்டாவது ஷெட்யூலை பூந்தமல்லிக்கு அருகிலிருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்த முயல… அங்குதான் கட்டை. 2.0 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடத்தை மாற்றுங்க என்று கூறிவிட்டார் அஜீத். இதையடுத்துதான் ஐதராபாத்துக்கு கிளம்புகிறது AK57 டீம்-

நடுவில் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு. ஏன்? அவசரம் அவசரமாக சில காட்சிகளை அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சிவா. காஜல் அகர்வாலையும் சிறுத்தை சிவாவையும் ஷுட்டிங் ஸ்பாட்டில் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு வாயெல்லாம் இனிப்பு. ஏன்? இன்னும் சிறிது நேரத்தில் அஜீத் வருவாரே என்றுதான்.

காலையில் இருந்தே அங்கு காத்திருக்கும் ரசிகர்கள், வாசலை பார்ப்பதும் உள்ளேயிருக்கிற பங்களாவை எட்டிப் பார்ப்பதுமாக நேரத்தை கடத்திக் கொண்டிருக்க, அவர்கள் தேடிய அஜீத் அங்கு இல்லவே இல்லை. வருவாரா? அதுவும் மாட்டாராம். ஏன்?

திடீரென மூன்று நாட்கள் காஜலில் கால்ஷீட் ஃபிரியாக இருப்பதாக அறிந்த சிவா, அஜீத் இல்லாத காட்சிகளை மட்டும் எடுத்துவிடலாமே என்று நினைத்தாராம். ஓடோடி வந்த காஜலை வைத்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அஜீத்தை பார்க்கலாம் என்று புல் மீல்ஸ் ஆசையோடு வந்த அத்தனை அஜீத் ரசிகர்களும் பலத்த பட்டினி! அஜித்தால் உண்ணாவிரதம் இருந்த ரசிகர்கள்

Leave a Reply