Wednesday, June 24
Shadow

ருபாய் 1000 சம்பளம் வாங்கும் அஜித் விவேக் ஓபராயின் வாழ்த்துகள் ?

ஓபராய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஒருமுறை எம்ஐடிக்கு வந்து அஜித் உதவுவதற்கு 1,000 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்.

எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் அஜித்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த உதவி. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் எம்ஐடி யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவி புரிவதற்காக ‘ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர்’ எனும் புதிய பதவியை நடிகர் அஜித் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அஜித்தின் புதிய பதவியேற்புக்கு, ‘விவேகம்’ படத்தில் அவரோடு நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து “அஜித் அண்ணா மறுபடியும் தன்னை நிரூபித்திருக்கிறார். நண்பனை நினைத்து பெருமையாக இருக்கிறது. மிகவும் உத்வேகம் தரக்கூடிய மனிதர் அவர். ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸராக சென்னை எம்.ஐ.டியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எப்போதும் முன்னுதாரணமாக இருப்பவர். இன்னும் நிறைய சக்திகள் வாய்க்கட்டும் அண்ணா!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஒருமுறை எம்ஐடிக்கு வந்து இந்தப் போட்டிக்காக உதவுவதற்கு அஜித் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1,000 ரூபாய். கோடிகளில் புரளும் அஜித், இதனால் வரும் வருமானத்தை எம்ஐடியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளார்.