Saturday, June 27
Shadow

பொறுமை இல்லை என்றால் போங்க என்று மேனஜேரை விளாசிய அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்களால் தலை என்று செல்லமாக அழைப்பார்கள் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் அஜித் என்றால் பொறுமை என்று சொல்லுவார்கள் அதோடு மிகவும் அமைதியானவர் அதோடு மிகவும் மரியாதையாக மரியாதையாக பழகக்கூடியவர் என்பது நாம் அறிந்த விஷயம்.

அஜித் படம் வருடத்துக்கு ஒரு படம் தான் வெளியாகிறது அப்படி வெளியாகும் அந்த படத்தை அவரின் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் பட அறிவிப்பில் இருந்து படம் வெளியாகும் வரை கொண்டாடுவார்கள் இத்தனைக்கும் அவருக்கு ரசிகர் மன்றம் இல்லை கட்சி இல்லை இருந்து அவர் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.அப்படி பட்ட ரசிகர்களை அவர் மேனேஜர் சுரேஷ் சந்திரா கடந்த சில வாரங்களாக ரசிகர்களை மிகவும் மோசமாக நடத்தி வந்தார் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் கோவமாக இருந்து வந்தனர் இந்த கோவம் நேற்று வேறு விதமாக வெடித்தது.

மேனேஜரான சுரேஷ் சந்திராவுக்கு ரசிகர் ஒருவர் போன் செய்கிறார். துவக்கதிலேயே பொறுமையிழந்து அந்த காலை அட்டெண்ட் பண்ணும் சுரேஷ் சந்திரா எடுத்த எடுப்பிலேயே ‘நீ எதாவது ஏரியா டிஸ்ட்ரிபியூஷன் வாங்கியிருக்கியா? அப்புறம் உனக்கு எதுக்கு பட ரிலீஸைப்பத்தி அக்கறை?? என்று துவங்கி முழுக்க ஒருமையிலேயே அந்த ரசிகரை காய்ச்சி எடுக்கிறார். பதிலுக்கு கோபப்படும் ரசிகர் .’அவருக்காகத்தான் [அஜீத்] பாக்குறேன்.இல்லைன்னா’ என்றபடி போனை கட் செய்கிறார்.

அந்த உரையாடலை உடனே அந்த ரசிகர் யூடுபில் அப்லோட் செய்ய, அதை லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்து தொடர்ந்து ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள். விஷயம் சில நிமிடங்களிலேயே தல காதுக்கு எட்ட, ‘ சுரேஷ் நமக்கு தொழில்ல பொறுமைதான அவசியம். ஒண்ணு போன்ல பொறுமையா பதில் சொல்லுங்க. இல்லைன்னா ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க’ என்று கண்டித்து போனைத் துண்டித்துவிட்டாராம்.