
அஜித்குமார் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரும் படம் விஸ்வாசம் இதை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்யில் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை யுவன் சங்கர் ராஜா ஏற்று இருக்கிறார்.
இந்த பட மூன்று பெண்களையும் ஒரு வழக்கறிஞர் பற்றிய படம் ஹிந்தியில் வழக்கறிஞர் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார்.
மேலும் 3 பெண்களில் ஒருவரான டாப்சி நடித்த கதாபாத்திரத்தில், நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு பெண் கதாபாத்திரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது பெண் கதாப்பாத்திரத்தில் விகரம் வேதா புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #kalyanipriyadharshan #thala59, #vinothkumar #shraddha srinath #yuvanshankarraja

