
தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகத்தைத் திறந்த அல்லு அர்ஜூன் – ‘ICONZA’ எனப் பெயரிட்டார்
நடிகர் அல்லு அர்ஜூன், தனது தாத்தாவும் பழம்பெரும் நடிகருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ICONZA’ என்ற பெயரில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளார்.
அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலுவலகத் திறப்பு விழா எளிமையான முறையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜூனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
விழா தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜூன், தனது தாத்தாவின் கலைப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அல்லு ராமலிங்கய்யா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததுடன், இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தையும் பெற்றவர். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளில் புதிய அலுவலகத்தைத் தொடங்கியிருப்பது, குடும்பத்தின் திரைப்பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
படைப்பாற்றல், புதிய யோசனைகள் மற்றும் கூட்டுப் பணிகளுக்கான தளமாக ‘ICONZA’ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, அல்லு அர்ஜூனின் கலை மற்றும் படைப்புத் துறையில் விரிவடைந்து வரும் பயணத்திலும் இந்த அலுவலகம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ படத்திலும், அதன்பிறகு ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

Allu Arjun Launches New Office ‘ICONZA’ on Grandfather Allu Ramalingaiah’s Birth Anniversary
Icon Star Allu Arjun has launched his new office, ‘ICONZA’, on the birth anniversary of his grandfather and legendary actor Allu Ramalingaiah.
The office inauguration was held in a simple ceremony with a traditional pooja, attended by members of Allu Arjun’s family. Sharing pictures from the special occasion, the actor said that the new space is a tribute to his grandfather’s enduring artistic legacy.
Allu Ramalingaiah, one of the celebrated names in Indian cinema, had a career spanning more than five decades and appeared in over 1,000 films. He was also honoured with the Padma Shri for his contribution to the arts.
Choosing his grandfather’s birth anniversary to mark the beginning of this new chapter, Allu Arjun continues to carry forward his family’s rich association with cinema and the arts.
Designed as a space for creativity, collaboration and new ideas, ICONZA marks another significant step in Allu Arjun’s expanding creative journey beyond acting.
Meanwhile, Allu Arjun is gearing up for his upcoming film with director Atlee. The project has already made headlines by earning a place in the Guinness World Records. He will next be seen in Lokesh Kanagaraj’s ‘AA23’, followed by ‘Pushpa 3: The Rampage’.
