
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். மும்பையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஹிந்தி. பாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரதிக் பார்பர் மற்றும் சாடின் சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், டைகர் ஜிந்திகி ஹே படத்தில் நடித்த நவாப் ஷா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சுனில் செட்டி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியான போதும். அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வில்லை.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கம் இந்த படத்தில் நயன்ந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் ஜீவா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இணையமைத்துள்ளர். இந்த படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
