Saturday, February 15
Shadow

விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. அப்போது அங்கு படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இரைதயடுத்து படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியுள்ளாராம்.