
“பரியேறும் பெருமாள்” படத்தின் கன்னட ரீமேக்கில் இந்திய வங்கி நிறுவனர் திரு.வி.கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பேரன் அர்யன் ஷியாம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் வங்கி நிறுவனரான திரு.வி.கிருஷ்ணசுவாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் கொள்ளுபேரன் அர்யன் ஷியாம், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
வழக்கறிஞராக இருந்த போதும் திரு.வி.கிருஷ்ணசுவாமி பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியுள்ளார். அவர்கள் நடத்திய “அர்பத்நாட் பேங்க்கை” கீழிறக்கி, இந்தியர்களுக்கான வங்கி என்று இந்தியன் வங்கியை நிறுவினார். தமிழக சட்டமன்றத்தின் வெளியில், கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட சிலைகளில் இவர் முதல் இந்தியராவார். இன்றும், திரு.வி.கிருஷ்ணசுவாமியின் நினைவாக அனைத்து இந்தியன் வங்கி கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

திரு.வி. கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பெயரனான ஷியாம், ஏ.வி.எம். சரவணனின் பேத்தியை திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் “அந்த நாள்” என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து, தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இவர் “பரியேறும் பெருமாள்” படத்தின் கன்னட ரீமேக்கிலும் முன்னனி காதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
