Sunday, September 24
Shadow

“அஸ்வின்ஸ்” – திரை விமர்சனம்! (தமிழில் உலகத்தர மிரட்டல்) Rank 3.5/5

ஹாரர் பட ரசிகர்களுக்கு செம விருந்து – “அஸ்வின்ஸ்” திரை விமர்சனம்!

இந்தப் படத்தில் வசந்த் ரவி விமலா ரமணன் முதன்முறையாக நாயகியாக ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் முரளிதரன் உதயதீப் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் மிரட்டல் ஆன இசையில் வெளிவந்திருக்கும் படம் அஸ்வின்ஸ்

 

நடிகர் வசந்த் ரவி தரமணி , ராக்கி ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவரது நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள படம் அஸ்வின்ஸ். ஹாலிவுட் படங்களின் பாணியில் சைக்காலஜிகள் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் தருண் தேஜா. கதைப்படி முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவரின் இரட்டை குழந்தைகளான சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனால் மனவேதனையடைத்த விவசாயி அஸ்வின்ஸ் தேவர்களை நோக்கி தவம் இருக்கிறார். தவத்தின் பலனால் வரும் தேவர்கள் ஒருவரை மட்டுமே உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று கூறி ஒருவனுக்கு மட்டும் உயிர் கொடுக்கின்றனர். அதன்பிறகு இரண்டு குதிரை பொம்மைகளையும் கொடுத்து இயற்கையாகத்தான் இவன் மரணிப்பான் மற்ற எவையாலும் இவன் உயிர் போகாது என்று கூறி மறைகின்றனர். ஆனால் சகோதரனை இழந்த சோகத்தில் இருக்கும் சிறுவனிடம் வரும் சாத்தான் அவனை ஏமாற்றி ஒரு குரங்கு பொம்மையை எடுத்து செல்கிறது. நரகத்தில் இருந்து ஒரு சாத்தானை பூமியில் வாழவைக்கிறது. இதனால் அந்த ஊருக்கு சாபம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். தற்போது யூடியூப் சேனல் நடத்தி வரும் வசந்த் ரவி மற்றும் அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள தீவில் அமைந்திருக்கும் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் தனது சேனலுக்காக வீடியோ எடுக்க வருகின்றனர். ஆனால் அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்தியால் இவர்கள் மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர். இறுதியில் அவர்கள் வெளியே‌வந்தார்களா? இவர்களுக்கும் அந்த சாத்தானுக்கும் என்ன தொடர்பு என்பதை அதீத திகிலுடன் சொல்லியுள்ளார் இயக்குனர்.

தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் தரத்தில் ஒரு திகில் படம். கதையாக பார்த்தால் வழக்கமான பேய் படங்கள் போலத்தோன்றும் ஆனால் சவுண்ட் எஃபெக்ட்ஸ் நிச்சயம் உங்களை கதற விடும். அதுவும் முதல் பாதியில் வரும் காட்சிகள் மற்றும் சவுண்ட் பயங்கரம். தமிழ் படம் பார்க்கிறோமா இல்லை ஹாலிவுட் படம் பார்க்கிறோமா என நினைக்க வைக்கிறது.

வசந்த் ரவி நடிப்பு நன்று.  வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவருக்கு இப்படமும் நிச்சயம் பெயர்‌ சொல்லும் படம். பயம், பதற்றம், கோபம் என அத்தனையும் தனது கண்களாலே கடத்தியுள்ளார். விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன் என அனைவருமே ஒரு திகில் படத்துக்கு என்ன வேண்டுமோ அதனை கொடுத்துள்ளனர். இதுபோன்ற திகில் படங்களில் அதிக உழைப்பு இசை அமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்குதான். விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை மிகப் பெரிய பலம். முதல் பாதியில் நம்மை சீட்டின் நுணியில் அமரவைத்துவிட்டார் பயத்தில். எட்வினின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஹாலிவுட் தரத்தை கொடுத்துள்ளது. ட்ரோன் காட்சிகளில் விரியும் கடல் காட்சிகள் அற்புதம். நல்ல படங்களை எப்போதுமே ஊக்கப்படுத்தி வெளியிடும் சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் இதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

சைக்காலஜிகள் த்ரில்லர் என்பதால் சாதாரண சினிமா ரசிகனுக்கு இப்படம் புரிவது சற்று கடினம். ஆனாலும் ஹாலிவுட் மேக்கிங் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஹாரர் பட விரும்பிகளுக்கு நிச்சயம் நல்வரவு இப்படம். தவறவிட்டு விடாதீர்கள்.