
மர்ம உலகில் மிரட்டலான போர்வீரனாக அர்ஜுன் சர்ஜா… ‘வீராவி’ அறிமுகத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொலிமேரா 3’!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது!
‘பொலிமேரா’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் ஏற்படுத்திய வரவேற்பைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘பொலிமேரா 3’ படத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜாவின் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தும் காட்சித் தொகுப்பு தீபாவளி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.
வெளியாகியுள்ள இந்தக் காட்சித் தொகுப்பு வழக்கமான அறிமுகமாக இல்லாமல், படத்தின் கதைக்களம் பயணிக்கும் மர்ம உலகிற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. இருள் சூழ்ந்த கோயில், அமாவாசை இரவு, ஆன்மிக அடையாளங்கள் என அடுத்தடுத்து வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தருகின்றன. மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் அனந்த பத்மநாப சுவாமி தொடர்பான காட்சிகள் படத்தின் ஆன்மிகப் பின்னணியை வெளிப்படுத்துகின்றன.
இதனைத் தொடர்ந்து சத்யம் ராஜேஷ் ஏற்றுள்ள கொமரையா கதாபாத்திரம் மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகின்றன. மர்மமும் அமானுஷ்யமும் கலந்த இந்தச் சூழல், கதையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பான பின்னணியில், வாளேந்திய வீரனாக அர்ஜுன் சர்ஜா அறிமுகமாகும் தருணம் காட்சித் தொகுப்பின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. இதுவரை அவர் ஏற்று நடித்திராத வகையிலான கதாபாத்திரத்தில், கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, வலிமையான உடல்மொழி என ‘வீராவி’யாக அவர் காட்டும் மிடுக்கு கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக, அவரது கதாபாத்திர அறிமுகத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சியமைப்பும் பின்னணி இசையும் அந்தத் தருணத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
ஏற்கெனவே ‘பொலிமேரா’ படத்தின் முதல் பாகம் ஓடிடி வெளியீட்டின் மூலம் பெரும் கவனம் பெற்றது. தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றியைப் பதிவு செய்து, இந்தத் திரைப்பட வரிசைக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. இந்நிலையில், மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்ஜா இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சத்யம் ராஜேஷ் மீண்டும் கொமரையா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் தயாரிக்கின்றனர். டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.
முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முறை இன்னும் விரிவான கதைக்களத்துடன் உருவாகும் ‘பொலிமேரா 3’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘வீராவி’யாக அர்ஜுன் சர்ஜாவின் வருகை, இந்த மர்மத் திரைப்படத்தின் அடுத்த அத்தியாயம் குறித்த எதிர்பார்ப்பை இப்போதே அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனங்கள்: வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்)
தயாரிப்பாளர்கள்: வம்சி நந்திபாடி, பரத் நரங்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: டாக்டர் அனில் விஸ்வநாத்
ஒளிப்பதிவு: சித்தார்த்
இசை: கிருஷ்ண பிரசாத்
தமிழ் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Arjun Sarja Turns Fierce Warrior as ‘Viraavi’ in Polimera 3; First Look Raises Expectations!
The supernatural thriller franchise expands into Tamil, Telugu, Kannada and Malayalam
The much-awaited third instalment of the popular supernatural thriller franchise, Polimera 3, is gearing up for its theatrical release with an exciting new addition to its cast. The makers have unveiled the first look glimpse of Action King Arjun Sarja, who plays a pivotal character named Viraavi in the film. Released as a special Diwali treat, the glimpse showcases the actor in a powerful and completely different avatar, adding a fresh dimension to the film’s already intriguing world.
The newly released glimpse takes viewers into a mysterious world filled with spirituality, supernatural elements and dark secrets. It opens with visuals of a temple surrounded by darkness, gradually establishing the eerie atmosphere of an Amavasya night. Striking spiritual imagery featuring Lord Vishnu, Lord Shiva and Anantha Padmanabha Swamy adds an interesting layer to the narrative, hinting at the film’s unique combination of devotion, mystery and supernatural elements.
The mystery deepens with the appearance of Satyam Rajesh as Komaraiah, performing mystical rituals. The intense visuals and carefully created atmosphere build suspense, keeping viewers curious about the events that unfold next.
The biggest highlight arrives with the introduction of Arjun Sarja as Viraavi. Appearing as a formidable warrior wielding a sword, the actor makes a striking impression with his commanding screen presence, intense expressions and powerful body language. His rugged appearance and fierce look suggest a character with a strong identity, making his introduction one of the most exciting moments in the glimpse.
Arjun Sarja’s inclusion brings an additional attraction to the Polimera franchise. Known for his action-oriented roles, the actor’s transformation into Viraavi offers audiences a fresh experience. The transition from the film’s mysterious supernatural setting to his powerful warrior introduction is particularly impressive.
The Polimera franchise has enjoyed a remarkable journey so far. The first instalment, Maa Oori Polimera, gained considerable attention following its OTT release and attracted audiences across different languages. Its sequel, Polimera 2, went on to achieve significant success in theatres, further strengthening the franchise’s popularity.
With the third instalment, director Dr. Anil Vishwanath aims to take the franchise to a wider audience with a bigger cinematic experience. The addition of Arjun Sarja and the introduction of the intriguing Viraavi character have further increased expectations surrounding the project.
Satyam Rajesh reprises his popular role as Komaraiah, while Kamakshi Bhaskarla, Baladitya, Getup Srinu, Rakendu Mouli and several other talented actors play important roles in the film.
Polimera 3 is produced by Vamsi Nandipati and Bharath Narang under the banners of Vamsi Nandipati Entertainments and Sree Venkateswara Cinemas LLP (Asian Group). Dr. Anil Vishwanath has handled the story, screenplay, dialogues and direction. Siddharth is the cinematographer, while Krishna Prasad is composing the music.
With its combination of supernatural mystery, spiritual elements and action, Polimera 3 promises to take the franchise in an exciting new direction. The film is gearing up for a theatrical release in Tamil, Telugu, Kannada and Malayalam.
Cast: Action King Arjun Sarja, Satyam Rajesh, Baladitya, Kamakshi Bhaskarla, Getup Srinu, Rakendu Mouli and others.
Technical Crew:
- Production Banners: Vamsi Nandipati Entertainments, Sree Venkateswara Cinemas LLP (Asian Group)
- Producers: Vamsi Nandipati, Bharath Narang
- Story, Screenplay, Dialogues & Direction: Dr. Anil Vishwanath
- Cinematography: Siddharth
- Music: Krishna Prasad
- Tamil PRO: Nikil Murukan
