
மூன்றே நாளில் ரூ.145 கோடி வேட்டை… பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் ‘சீன்’!
தீபாவளி ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வசூல் விவரத்தைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம், கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்தது. முதல் நாளிலிருந்தே படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்ததால் வசூல் வேகமும் அதிகரித்துள்ளது.
இதில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு, ஜித்து மாதவனின் புதுமையான கதை சொல்லும் பாணி எனப் படத்தின் பல அம்சங்கள் ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நஸ்ரியா நசிம், நஸ்லென் ஆகியோரின் நடிப்பும், சுஷின் ஷியாமின் இசையும் படத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் வழக்கமான ரசிகர் வட்டத்தைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் படம் கவனம் பெற்றிருப்பது இந்த வசூல் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மூன்று நாட்களில் ரூ.145 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக 2D நிறுவனம் அறிவித்ததுடன், ‘145+ கோடி வசூல்… மெகா பிளாக்பஸ்டர்’ என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தொடர்ந்தால், ‘சீன்’ படத்தின் வசூல் மேலும் புதிய உயரத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மூன்று நாட்களில் வசூலில் கவனம் ஈர்த்துள்ள சூர்யாவின் இந்தப் படம், அடுத்தகட்டமாக என்ன சாதனை படைக்கப்போகிறது என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Suriya’s ‘Scene’ Creates Box Office Sensation, Crosses Rs 145 Crore Worldwide in Just Three Days!
Actor Suriya’s latest film, ‘Scene’, has made an impressive start at the box office, collecting over Rs 145 crore worldwide within just three days of its theatrical release. The film’s production house, 2D Entertainment, officially announced the milestone through a special poster celebrating its box office success.
Directed by Jithu Madhavan, ‘Scene’ hit theatres worldwide on November 6 as a Diwali release. The film received a positive response from audiences from its opening day, with its box office performance gaining momentum over the following days.
Suriya’s different approach to his role, Jithu Madhavan’s distinctive storytelling and the performances of Nazriya Nazim and Naslen have emerged as major highlights. The music composed by Sushin Shyam has also added to the film’s appeal. The film’s comedy sequences and engaging screenplay have particularly connected with audiences.
According to the official announcement from 2D Entertainment, ‘Scene’ has grossed more than Rs 145 crore globally in its first three days. Marking the achievement, the production house unveiled a new poster carrying the tagline, ‘Rs 145+ Crore Worldwide – Mega Blockbuster’.
The film’s strong performance is not limited to Tamil Nadu, as it has also reportedly received a favourable response in Kerala and other overseas markets. Its appeal among audiences beyond Suriya’s regular fan base has further contributed to its box office momentum.
With the film continuing its theatrical run, expectations are high that ‘Scene’ will add more numbers to its worldwide collection in the coming days. Having crossed the Rs 145 crore mark in its opening three days, the Suriya-starrer has certainly emerged as one of the major talking points of this Diwali season.
