Friday, February 7
Shadow

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் அதர்வா

வால்மீகி படம் மூலம் நடிகர் அதர்வா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இயக்குனர் ஹாரிஸ் சங்கர் இயக்கத்தில் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் சித்தார்த் ரோலை அதர்வாவும், பாபி சிம்ஹா ரோலில் வருண் தேஜ்-ம் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.

சித்தார்த் கேரக்டருக்கு நடிகர் அதர்வா பொருத்தமாக இருப்பார் என்று அதர்வாவிடம் இயக்குனர் தெரிவித்ததை தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க அதர்வா ஒகே சொல்லி விட்டார். பிரபலமான டோலிவுட் புரடைக்சன் ஹவுஸ் 14 ரெலகள் தயாரிக்கும் இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் அதரவா போலீஸ் அதிகாரியாக நடிகை ஹ்ன்சிகாவுடன் நடிக்கும் 100 படம் வரும் மே 3ம் தேதி ரீலிஸ் ஆக உள்ளது.