நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் அன்சன் பால். சமீபத்தில் வெளிவந்த 90எம்எல் படத்தில் ஓவியா, பாய்பிரண்டாக வரும் அந்த சிக்ஸ் பேக்ஸ் நடிகர் தான் அன்சன் பால். அவர் இப்போது கார்த்திக்கு வில்லனாக நடிக்கப்போகிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அன்சன் பால். வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கெட்அப் மாற வேண்டியது இருப்பதால் அன்சன் பால், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.