
விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆதிய் வர்மா ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் என்பதால் த்ருவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போவாதவர்களே இந்திய சினிமாவில் இருக்க மாட்டார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன, ஆக்டிங்கில் வேற லெவல் அவுட்புட்டை த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலே கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதித்ய வர்மா படம் ஒரு பக்காவான ரீமேக் படம் என்றும், கோலிவுட்டில் கனவு கண்ணனுக்கு இருந்த வெற்றிடத்தை ஆதித்ய வர்மா அசால்ட்டாக நிரப்பியுள்ளார்.இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
படத்தின் முதல் பாதி சிறப்பாக அமைந்துள்ளது ஹீரோவாக நடித்துள்ள விக்ரம் மகன் த்ருவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். தமிழ் திரையுலகில் விக்ரம் மகன் த்ருவ் பெரிய ரவுண்ட் வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ரீமேக் படமாக இருந்த போதும் படம் நல்ல போய் கொண்டிருக்கும் போது பாடல்கள் எதுவும் தடையாக இடம் பெறவில்லை. படம் தொடர்ச்சியாக சுவாரசியாமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை பார்த்தால், சிறிய குறும்படத்திற்கு உண்டான கதை தான் என்றாலும் இந்த அளவுக்கு சிறப்பாக படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.
படத்தின் பிளஸ் – விக்ரம் மகன் த்ருவ் நடிப்பு,
படத்தின் மைன்ஸ் – குறிப்பிட்டு செல்லும் படியாக எதுவும் இல்லை
மொத்தத்தில் இந்த படம் உலக தரம் வாய்ந்த படமாக இருக்கிறது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
