
ஆராஸ் சினிமாஸ் தமிழ் சினிமாவில் பல படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகிறது இவர்கள் தமிழ் மட்டும் இல்லாமல் குறிப்பாக ஆங்கில படங்கள் அதிகமாக வாங்கி வெளியிடுகிறார்கள். பல தமிழ் படங்களை வெளியிட்ட ஆராஸ் சினிமாஸ் வெற்றி என்று கண்ட ஒரே படம் என்றால் அது விக்ரம் நடித்த இருமகன் மட்டும் தான் அதன் பின்னர் இவர்கள் வெளியிட்ட டோரா விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி பெரிதாக ஒன்றும் வெற்றியை சொல்லும் அளவுக்கு இல்லை என்று தான் சொல்லணும்.
இதற்கு முன் பண்ண படங்கள் எல்லாமே உப்புமா படங்கள் தான் அந்த வகையில் வரும்வாரம் ரிலீஸ் செய்யும் பண்டிகை படத்தை இவர்கள் எந்த அளவுக்கு வெற்றியடைய செய்வார்கள் என்பது ஒரு கேள்விகுறி தான் அது மட்டும் இல்லாமல் தற்போது பண்டிகை படத்தி ஹீரோ கிருஷ்ணாவுக்கு நிச்சயம் ஒரு வெற்றி படம் தேவை படுகிறது அந்த வெற்றிக்கு வழி செயவார்காளா இல்லை மீண்டும் அதிபாதளத்தில் தள்ளுவார்கள என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும்