
பண்டிகை – திரைவிமர்சனம் ( கொண்டாட்டம் ) Rank 3.5/5
பண்டிகை படம் மூலம் மேலும் ஒரு புதிய இயக்குனர் பெரோஸ் இளம் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனாராக இல்லாமல் நேரடியாக இயக்குனராக களம் இறங்கியவர் இயக்குனர் பெரோஸ் முதல் படம் முத்திரை படமாக அமைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவுக்கு புது கதை ஸ்ட்ரீட் பைட் யாரும் தொடாத களம் முதல் முறையாக தொட்டு வெற்றிகன்டுள்ளார் என்று தான் சொல்லணும். அதுவும் படத்தின் முதல் பாதி சும்மா விறு விறுன்னு போகுது ஒவ்வொரு காட்சியும் மிகவும் எதார்த்தமாக இருக்கு என்பதை விட படு கிருப்பாக இருக்கு என்று தான் சொல்லணும் ஆனால் கொஞ்சம் ரத்த வாடை அதிகம் சண்டை படம் என்பதால் அதுவும் தெரியவில்லை.
படத்தை இயக்குனர் மகள் விஜயலட்சுமி தயாரித்து இருக்கிறார் அவர் கணவர் தான் இயக்குனர் பெரோஸ் கணவனுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்லணும். இயக்குனர் பெரோஸ் நிச்சயம் தமிழ் சினிமாவி...