Sunday, January 11
Shadow

Author: admin

விக்ரமுடன் மோதும் தனுஷ்

விக்ரமுடன் மோதும் தனுஷ்

Latest News
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு தனுஷின் 'தொடரி' மற்றும் விக்ரமின் 'இருமுகன்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் தயாராகி வரும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் அனைத்து கிராபிக்ஸ் பணிகளும் முடிந்து தணிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. தணிக்கை பணிகள் முடிந்து இப்படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களான செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது. இதே தினத்தில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'இருமுகன்'. சமீபத்தில் வெளியா...
அஜித்தை பின் தொடரும் நயன்தாரா

அஜித்தை பின் தொடரும் நயன்தாரா

Latest News
கடந்த சில வருடங்களாகவே அஜித் தனது படங்களுக்கு எவ்வித புரமோஷனும் செய்வது இல்லை. படத்தொடக்க விழா முதல் இசை வெளியீடு வரை எந்த புரமோஷனுக்கும் அவர் செல்வது இல்லை. இதற்கு ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் மட்டுமே அவரை அணுகி படங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் அஜித் படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்பது வேறு விஷயம். இந்நிலையில் இதே பாலிசியை தற்போது நயன்தாரா கடைபிடித்து வருகிறார். தன்னிடைய புதிய படங்களுக்காக கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் அவர் போடும் முதல் கண்டிஷன் தன்னால் படத்தின் எந்த புரமோஷனுக்கு வரமுடியாது. இதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபகாலங்களில் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது நயன்தாரா சுதாரித்து இந்த புதிய கண்டிஷன்களை போட்டுள்ளதாக அவரது வட்டாரங்கள...
அப்பா – மகன்  உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது  அஸ்வின் – சுவாதி ரெட்டி நடிக்கும் ‘திரி’ திரைப்படம்

அப்பா – மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது அஸ்வின் – சுவாதி ரெட்டி நடிக்கும் ‘திரி’ திரைப்படம்

Latest News
தமிழ் சினிமாவில் தந்தை - மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் 'திரி'. 'சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த 'திரி' படத்தை அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கி இருக்கிறார். எம். வெற்றிக்குமரன், எஸ். ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகிய மூவரும் இந்த 'திரி' படத்திற்கு  இணை தயாரிப்பாளர்களாக மட்டுமில்லாமல் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்து  வருவது 'திரி' படத்திற்கு பக்கபலம். அஸ்வினின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக அனுபமா குமார், மிரட்டலான வில்லனாக  ஏ.எல். அழகப்பன்  மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களி...
ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்

ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்

Latest News
காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்....