- கடந்த சில வருடங்களாகவே அஜித் தனது படங்களுக்கு எவ்வித புரமோஷனும் செய்வது இல்லை. படத்தொடக்க விழா முதல் இசை வெளியீடு வரை எந்த புரமோஷனுக்கும் அவர் செல்வது இல்லை. இதற்கு ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் மட்டுமே அவரை அணுகி படங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் அஜித் படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்பது வேறு விஷயம்.
- இந்நிலையில் இதே பாலிசியை தற்போது நயன்தாரா கடைபிடித்து வருகிறார். தன்னிடைய புதிய படங்களுக்காக கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் அவர் போடும் முதல் கண்டிஷன் தன்னால் படத்தின் எந்த புரமோஷனுக்கு வரமுடியாது. இதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருவதாக கூறப்படுகிறது.
- சமீபகாலங்களில் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது நயன்தாரா சுதாரித்து இந்த புதிய கண்டிஷன்களை போட்டுள்ளதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன