Monday, July 27
Shadow

அயோக்யா” குழுவினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது நடிப்பில் வெளியாக உள்ள அயோக்யா படத்தில் பிசியாக இருந்து வருகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை “அயோக்யா” குழுவினருடன் செட்டிலேயே நடிகர் விஷால் கொண்டாடியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பார்த்திபன், அயோக்யா தீபாவளி என்று எழுத்தப்பட்ட கேக் ஒன்றை கொண்டு வந்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த படக்குழுவினர் நாளை வரை விசாகப்பட்டினத்தில் படப்படிப்பில் பங்கேற்க உள்ளனர்.

பி மது புரோடைக்ஷ்ன் உடன் இணைந்து லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ராசி கன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இதில் நட்சத்திரங்கள் பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், சச்சு, வசமி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் சினிமாடோகிராபி பணைகளை ஆர்.கார்த்திக் செய்துள்ளார். எஸ்எஸ் மூர்த்தி கலை பணியையும், ரூபின் எட்டிடிங், ராம் லக்ஷ்மன் சண்டைகள், பிருந்தா & சுபி கொரியோகிராபி, உத்தர மேனன் காஸ்டியும், முருகேஷன் தயாரிப்பு மேனேஜராகவும், ஆண்டனி சேவியர் புரொடக்ஷன்ஸ் எக்சிகியூட்டிவ்வாகவும் பணியாற்றி வருகின்றனர்.