
பாகுபலி 2 உலகமே எப்ப ரிலீஸ் என்று காத்து கொண்டு இருந்த நேரம் ஒரு வழியாக கடந்த வெள்ளிகிழமை வெளியானது. எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்தது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று ஒரு கேள்வி எல்லோரிடமும் இருந்தது. அதை பூர்த்தி செய்து இனி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று ஒரு கேள்வியை எழுப்பினார் இயக்குனர் ராஜமௌலி. இந்திய சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவே பாராட்டியது என்று தான் சொல்லணும் ஒருபடத்தில் பிரமாண்டம் பட்டும் போதாது அதுக்கான கதை தொழில் நுட்பம் எல்லாம் இருக்கணும் என்று சொன்னவர் இயக்குனர் ராஜமௌலி .
இந்த படம் வசூலில் என்ன பண்ணும் என்று ஒரு கேவியும் இருந்தது இந்த படத்தை வாங்கியவர்கள் முதல் பாகத்தை விட மூன்று மடங்கு கொடுத்து வாங்கினார்கள். இதை சமாளிக்குமா என்ற ஒரு கேள்வியும் இருந்தது அதையும் மூன்று நாளில் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் சாதிக்க முடியாத ஒரு வசூல் என்று தான் சொல்லணும் கிட்டத்தட்ட் மூன்று நாளில் 5௦௦ கோடி வசூல் இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை வாழ்த்துகள் மொத்த பாகுபளிமொத்த குழுவுக்கும் . இந்த செய்தியை பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
