
உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது பாகுபலி2 இந்த இந்தியாவிலே அதிக பொருள் செலவில் உருவான படம் என்று சொன்னால் அது மிகையாகது இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனால் தான் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தப்பிப்பார் ஆனால் சமீபத்தில் இந்த படத்துக்கு ஒரு மிக பெரிய பிரச்சனையால் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’ படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பார்ப்பை போல, சத்யராஜியின் கதாபாத்திரமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ‘பாகுபலி-2’ படத்தை ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி விவகாரத்தில் கன்னடர்களை அவமதித்த சத்யராஜ் நடித்த ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என்றும், சத்யராஜ் பெங்களூர் வந்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பும் என்றும், தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பாகுபலி-2 படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகாவில் படம் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
