Thursday, April 25
Shadow

சிவலிங்கா – திரைவிமர்சனம் (மாஜிக்) Rank 3/5

சிவலிங்கா மீண்டும் ஒரு பேய் படம் அதே பழிவாங்கும் பேய் படம் ஆனால் படத்தில் மிக பெரிய ட்விஸ்ட் இருக்கு வாங்க பார்க்கலாம் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு பேய் படத்து தான் களம் இறங்கி உள்ளார். ஆனால் இந்த படத்தில் போன படங்கள் மாதிரி பேய் ரொம்பவும் பயப்படுபவர் இல்லை பயப்ப்படுவார் ஆனால் பயப்படமாட்டார்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங், ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்ரகாஷ், ராதாரவி, வடிவேலு சந்தானபாரதி, சக்திவாசு சாரா, மற்றும் பலர் நடிப்பில் தமன் இசையில் சர்வேஸ் முராரி ஒளிப்பதிவில் பல வெற்றி படங்களை கொடுத்த குறிப்பாக ரஜினியின் சந்திரமுகி மன்னன் போன்ற படங்களை இயக்கிய P.வாசு தான் இந்த படத்தின் இயக்குனர். பொதுவாக P.வாசு படங்கள் என்றாலே கமர்சியல் படமாக தான் இருக்கும் அதில் ஒரு சின்ன சென்டிமென்ட் வைத்து வெற்றியை பறித்துவிடுவார் அதே பாணி என்று தான் சொல்லணும் ஆனால் வெற்றியா இல்லை தோல்வியா என்பது நீங்கள் ரசிகர்கள் கையில் தான் இருக்கு.

சக்திவாசு ரயிலில் செல்லும் கொலை செய்துவிடுகிறார்கள் இதை யார் செய்தது என்று கண்டுபிடிப்பது தான் கதை. இது தான் படத்தின் ஒன் லைன் இதற்கு எதுக்கு பேய் என்று நீங்கள் நினைப்பது தெரியுது. அங்க தான் படத்தில் மிக பெரிய ட்விஸ்ட்.

சக்திவாசு காதலி சாரா இந்த கொலையில் மர்மம் இருக்கு இதை யார் செய்தது என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று போலீசில் புகார் கொடுக்கிறார் இதற்கு ஒரு தனி படை அதாவது இந்த கேஸ் யாருக்கும் தெரியாமல் விசாரிக்கவேண்டும் என்று சக்திவாசு காதலி சொல்ல போலீஸ் உடனே இந்த காஸ் சி. பி.சி.ஐ. டி மாற்ற அப்பத்தான் ராகவா லாரன்ஸ் சி. பி.சி.ஐ.டி அதிகாரி இவரிடம் இந்த கேஸ் வருகிறது அவரின் மனைவி ரித்த்காவுடன் இந்த கேஸ் கண்டுபிடிக்க வேலுருக்கு வருகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் வீட்டின் பின் புரம் ஒரு சுடுகாடு இதனால் படம் கொஞ்ச நேரம் பயமாகவே இருக்கும்.

பின்னர் ரித்திகா சிங் நடவடிக்கையில் மாற்றம் வரும் இதை வீட்டு வேலைக்காரன் வடிவேலு ராகவாவிடம் சொல்ல என்ன என்று கடு பிடித்தால் சக்திவாசு ஆன்மா ரித்திகா உடம்பில் உள்ளது என்று தெரிகிறது. இங்கு இருந்து தான் பேயாட்டம் ஆரம்பம். சக்தி வாசுவை யார் கொலை செய்தது என்று ஒரு பக்கம் ஏன் ரித்த்கா உடம்பில் சக்தி வாசு ஆன்மா போனது என்ற குழப்பம் ஒரு பக்கம் இந்த கொலையை யார் செய்தது பின்னர் தன் மனைவி உடம்பில் இருக்கும் சகதிவாசு ஆன்மாவிடம் இருந்து தன் மனைவியை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை

ராகவா லாரன்ஸ் மீண்டும் பேய்க்கு பயந்து பாத்ரூம்க்கு அம்மாவை எல்லாம் கூப்பிடும் பயப்படும் ஆசாமியாக எல்லாம் இல்லாமல் இதில் தைரியசாலியாக நடித்துள்ளார். எப்போதும் போல பேய் கூட பேசுகிறார் பேயின் ஆசையை இதிலும் தீர்த்து வைக்கிறார் பேய் படம் என்றாலே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கும் ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் அமுக்கி வாசித்து இருக்கிறார்.

சக்திவாசு இந்த படம் தான் அவருக்கு ஒரு சிறந்த படமாக அமைத்துள்ளது என்று சொல்லலாம் நல்ல நடிப்பு தன் கதாபாத்திரம் உணர்ந்து அருமையாக நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் பின்னி இருக்கிறார் என்று தான் சொல்லணும் ஆனால் கொஞ்சம் உடல் எடையை குறையுங்க வசன உச்சரிப்பையும் பார்த்து பேசுங்கள்

படத்தின் மிக பெரிய பலம் ரித்திகா சிங் நல்ல பாக்ஸர் என்று தெரியும் மிக சிறந்த நடிகை என்றும் நிருபித்துள்ளார் படத்தில் நடிப்பில் மிக பெரிய பேயாட்டம் ஆடியுள்ளார் என்று தான் சொல்லணும் பேயாக வரும் போதும் சரி அதே போல காதல் காட்சிகளிலும் சும்மா பின்னி பெடல்எடுக்கிறார். தன் பலத்தை உணர்ந்து தன் கதாபாத்திரத்தை செய்துள்ளார். அதே போல நடனத்திலும் சும்மா வாயயை பிளக்கவைகிறார்.

நீண்ட வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தது இந்த வடிவேலுவிற்காக தான் என்று சொல்லும்படி கலக்கியுள்ளார். அதிலும் Use me என்ற வசனம் இனி மிமி கிரியேட்டர்களுக்கு விருந்து. தான் எப்படி திருடன் ஆனேன் என்பதை ஊர்வசியிடம் சொல்லிக்காட்டும் இடம் சிரிப்பு சரவெடி.

P.வாசு தமிழ் சினிமாவில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் அதுமட்டும் இல்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஆனால் இந்த படத்தின் கதையில் பல கோளாறுகள் லாஜிக் என்பது சுத்தமாக இல்லை என்று தான் சொல்லணும் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே எதோ ஒன்று ஒட்டவில்லை என்று தான் மிஸ்ஸிங் என்று தான் சொல்லணும் ஆனால் படத்துக்கு பிளஸ் என்று சொன்னால அது திரைகதை இதனால் படம் போர் அடிக்காமல் சுவாரிசியமாக இருக்கு என்று தான் சொல்லணும்.

பல முன்னணி நடிகர்கள் எதோ ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி வந்துட்டு போறாங்க என்பது ஒரு குறை மற்றபடி படம் கலகலவென போகுது படத்துக்கு மிக பெரிய பிளஸ் பாடல்கள் என்று தான் சொல்லணும் அதே போல பின்னணி இசையும் அருமை ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.

மொத்தத்தில் சிவலிங்கா தரிசிக்கலாம் Rank 3/5

Leave a Reply