Monday, October 7
Shadow

வேதாளம் பாதி வசூலை கூட நெருங்காத பைரவா!

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அதையும் மீறி தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது.

ஆனால் வெளிநாடுகளில் இப்படத்தின் வசூல் போதுமானதாக இல்லை. குறிப்பாக மலேசியாவில் இப்படம் தற்போதுவரை MYR 4.87 M தான் வசூல் செய்துள்ளதாம். இது வேதாளம் வசூலின் பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.இது மட்டும் இல்லாமல் அமெரிக்க மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலும் மிக சொற்ப அளவில் தான் வசூல் செய்துள்ளது வாங்கிய எல்லோருக்கும் இந்த படம் மிக நஷ்டம் தான் குறிப்பாக தமிழ் நாட்டில் வாங்கிய அனைவருக்கும் மிக பெரிய நஷ்டம் தான் என்று சொல்லணும். தெறியின் பாதி வசூலை கூட தாண்ட வில்லை என்பது தான் உண்மை.

Leave a Reply