நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘நாகேஷ்திரையரங்கம்’. ட்ரான்ஸ் இண்டியா மீடியா&எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தை அகடம் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பிடித்த இசாக் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஆஷ்னாசாவேரி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் காளிவெங்கட், சுவாமிநாதன் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் அதி முக்கிய கதாப்பாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா, சித்தாரா, போன்றோர் நடிக்கின்றனர். வெகு வேகமாக மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று இரவு வெளிவருகிறது. இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு.பழனியப்பன் இதை வெளியிடுகிறார்கள்