Monday, April 27
Shadow

பலே வெள்ளையத் தேவா – திரை விமர்சனம் (Rank 5/1.5 ) நமக்கு எது வருமோ அதை மட்டும் செய்யணும்

சசிகுமார் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதில் ஒரு பங்கு குட படத்தில் இல்லை என்று தான் சொல்லும் இந்த படத்தின் கதை தொலைநோக்கு பார்வை உள்ள விஞ்ஞானம் நிரந்த கிராமத்தின் கதை என்று சொன்னிங்க அப்படி என்ன இருக்கு என்று சொல்லுங்க பாவம் கோவை சரளாவை காமெடி என்ற போர்வையில் கத்த வச்சு இருக்கீங்க சசி உங்களுக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்ங்க தயவுசெய்து

பலே வெள்ளையத் தேவா சசிகுமார் அறிமுக நாயகி தான்யா கோவை சரளா ரோகினி சங்கிலி முருகன் பாலா சிங் மற்றும் பலர் நடிப்பில் தற்புக சிவா இசையில் ரவீந்தர் நாத் குரு ஒளிபதிவில் அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் பலே வெள்ளையத் தேவா

சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வழுதூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.

அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் பாலா சிங், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.

அதே ஊரில், கறிக்கடைக் காரரின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.

இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் பாலாசிங், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய பாலா சிங்கை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் பாலாசிங்.

அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் பாலாசிங். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.

பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய பாலாசிங்கை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

சசி குமார் எப்பவும் சிறந்த கதையை தேர்தெடுத்து நடிப்பார் ஆனால் அவருக்கு இந்த படத்தி என்ன ஆச்சு என்று தெரியவில்லை கதை என்று ஒன்றும் பெருசா இல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு என்ன வரும் வராது என்று இவருக்கு முதலில் தெரியவேணும் ஓர் இரு காதல் காட்சிகளில் வந்தாலே சகிக்க முடியாது இந்த படத்தில் படம் முழுவதும் அப்பா எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இதுவே இந்த படத்தை பார்க்கனுமா வேணாமா என்று யோசிக்க வைக்கிறது சசி வந்தமா அருவாள எடுத்தமா கத்துனமா வெட்டுனமா என்ற கதை தான் உங்களுக்கு சரி அதுவும் நீங்க ரொமான்ஸ் பண்ணும் பார்க்கவே முடியாது அதில் உங்க சிரிப்பு வேற சாமி ஆளவிடுங்க ஏன் இப்படி கொள்ளுரிங்க

அடுத்து இயக்குனர் சோலை பிரகாஷ் எப்படி உங்களால் முதல் படத்தை இப்படி இயக்க முடிந்தது என்று தெரியவில்லை காமெடி என்று சொன்னிங்க அது எங்க உங்க படத்துல இருந்துது என்று சொல்லுங்க பாவம் சிறந்த காமெடி நடிகையை இப்படி கத்த வச்சு அவங்க மேல இருந்த மரியாதை போக வச்சுடிங்கா எப்படி தான் இப்படி ஒரு கேவலமான பிளாஷ்பேக் நாயகி அப்பாவுக்கும் கோவைசரளா அம்மாவுக்கும் அப்புறம் வில்லன் தாத்தா இப்படி மூணு பிளாஷ்பேக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வருபவர்களை கொஞ்சமாவது மதிங்க நீங்க செய்தது இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நாகியை அறிமுகபடுத்துனது தான்

ரோகினி பெருசா ஒன்னும் இல்லை சும்மா வந்துட்டு போறாங்க இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்சு இருக்காங்க

இசையமைப்பாளர் தர்புகா சிவா இப்ப தான் இரண்டாவது படம் அதுக்குள்ள போட்ட டுன் மறுபடியும் பாடல்கள் எல்லாம் சொல்லும்படி ஒன்னும் இல்லை

மொத்தத்தில் பலே வெள்ளையத் தேவா கருப்பு தேவா Rank 5/1.5

Leave a Reply