
திரையரங்க வெற்றியைத் தாண்டி உலக மேடையில் தடம் பதிக்கும் ‘ஜி.டி.என்.’
நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்
சென்னை: ஒரு திரைப்படத்தின் வெற்றியை இனி திரையரங்க வசூல் மற்றும் வெளியான நாட்களின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிட முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம். இந்தியாவின் பழம்பெரும் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச ஓடிடி தளத்திலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, அவரது கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு முயற்சிகள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களை திரையில் பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்தில் ஆர். மாதவன் நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன், ஜி.டி. நாயுடுவாக மாதவனின் நடிப்பும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. குறிப்பாக, ஒரு வரலாற்று மனிதரின் வாழ்க்கையை வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், அவரது காலகட்டத்தையும் சமூகச் சூழலையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது.
ஜி.டி. நாயுடுவின் காலத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள படத்தின் பின்னணி, காலக்கட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை மையப்படுத்திய கதை நகர்வு ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் இந்தியாவிலேயே தொழில்நுட்ப முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நாயுடுவின் சிந்தனையும், அதற்காக அவர் எதிர்கொண்ட தடைகளும் கதையின் முக்கியப் பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னர் செப்டம்பர் 4ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ‘ஜி.டி.என்.’ வெளியாகியது. பல்வேறு பிராந்திய மொழிகளில் கிடைக்கத் தொடங்கிய இப்படம், ஓடிடி வெளியீட்டின் முதல் வாரத்திலேயே பார்வையாளர்களிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது.
இதன் தாக்கமாக இந்திய அளவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜி.டி.என்.’ முன்னணி இடங்களைப் பிடித்தது. சமூக வலைதளங்கள் மற்றும் பார்வையாளர்களின் வாய்மொழிப் பரிந்துரைகள் மூலம் படத்திற்கான கவனம் மேலும் அதிகரித்த நிலையில், இந்தியாவைத் தாண்டியும் இப்படம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.
அதன் அடுத்தகட்டமாக, நெட்ஃபிளிக்ஸின் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘ஜி.டி.என்.’ இடம்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்திய வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட சர்வதேச பார்வையாளர்களிடமும் இப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இப்படம் டாப் 5 இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பது, பிராந்திய எல்லைகளைத் தாண்டி படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
‘இரண்டாவது வாய்ப்பு’ அல்ல… புதிய உலக மேடை!
திரையரங்குகளில் வெளியான ஒரு திரைப்படம் அங்கு தனது ஓட்டத்தை முடித்துவிட்டால் அதன் பயணம் முடிந்துவிடும் என்ற பழைய பார்வைக்கு ஓடிடி தளங்களின் வளர்ச்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதற்கு ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் தற்போதைய பயணமும் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.
திரையரங்குகளில் ஏற்கனவே படத்தைப் பார்த்த ரசிகர்களின் பரிந்துரைகள், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு புதிய பார்வையாளர்களை படத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கைக் கதை, இந்தியாவுக்கு வெளியேயும் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் இல்லை என்ற பொதுவான கருத்தையும் இப்படத்தின் ஓடிடி வரவேற்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வலுவான கதைக்களம், வரலாற்றுப் பின்னணி மற்றும் மனிதநேயத்துடன் சொல்லப்படும் உண்மைக் கதைகள் மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ‘ஜி.டி.என்.’ நிரூபித்து வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் தொடங்கிய பயணம் தற்போது சர்வதேச டிஜிட்டல் தளத்தை எட்டியுள்ள நிலையில், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை குறித்த ஆர்வத்தையும் இப்படம் மீண்டும் உருவாக்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த ஒரு கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கை, இன்றைய தலைமுறையினரிடமும் சர்வதேச பார்வையாளர்களிடமும் பேசுபொருளாக மாறியிருப்பதே ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் தற்போதைய வெற்றியின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Beyond Theatres: R. Madhavan’s ‘G.D.N.’ Makes Its Mark on the Global OTT Stage
Biographical drama based on legendary inventor G.D. Naidu enters Netflix’s Global Top 10
Chennai: The success of a film is no longer measured solely by its theatrical run or box-office performance. R. Madhavan-starrer ‘G.D.N.’, a biographical film based on the life of legendary Indian inventor and industrialist G.D. Naidu, is emerging as a strong example of how a film can find a much wider audience through digital platforms.
The film chronicles the remarkable life of G.D. Naidu, popularly regarded as the “Edison of India,” and explores his pioneering inventions, entrepreneurial journey and determination to develop indigenous technology despite the challenges posed during the colonial era.
R. Madhavan plays the titular role of G.D. Naidu, with an ensemble cast featuring Sathyaraj, Jayaram, Priyamani and Dushara Vijayan, among others.
Released in theatres on August 7, ‘G.D.N.’ received appreciation from audiences and critics, with Madhavan’s portrayal of the legendary inventor emerging as one of the major talking points. Rather than presenting the life of a historical figure merely as a collection of facts, the film attempts to recreate the period in which Naidu lived, along with the social and technological environment of the time.
The film’s period setting, detailed production design and focus on Naidu’s technological achievements have also drawn attention. His vision of developing technology within India instead of depending entirely on foreign advancements, as well as the obstacles he faced while pursuing that vision, form an important part of the narrative.
Following its theatrical release, ‘G.D.N.’ premiered on Netflix on September 4 in multiple regional languages. Within its first week on the streaming platform, the film began gaining momentum among viewers, with its theatrical word-of-mouth appreciation seemingly translating into increased digital interest.
The film subsequently moved into the top ranks of the most-trending movies in India, further expanding its visibility on the streaming platform. Discussions and recommendations among viewers on social media also contributed to the film reaching audiences beyond its original theatrical market.
From India to the Global Top 10
The film’s OTT journey has now extended beyond India. ‘G.D.N.’ has entered Netflix’s Global Top 10 movies list, marking a significant milestone for the biographical drama.
The film has also been attracting attention among Indians living overseas as well as international viewers interested in Indian history, technology and biographical storytelling.
Notably, ‘G.D.N.’ has secured a place among the Top 5 titles in countries including the United Arab Emirates, Sri Lanka, Singapore, Pakistan and Bahrain, indicating the growing reach of the film across international markets.
OTT Turns a Second Window into a Global Platform
The journey of ‘G.D.N.’ also highlights the changing dynamics of film consumption in the streaming era. A movie’s theatrical run no longer necessarily marks the end of its journey. Instead, OTT platforms can introduce films to entirely new audiences, sometimes giving them a much larger international platform than they had during their theatrical release.
For ‘G.D.N.’, the transition from theatres to streaming has brought the story of one of India’s pioneering inventors to audiences far beyond the geographical boundaries of the country.
The film’s performance on Netflix also underlines the growing potential of Indian biographical and historical stories in the global streaming ecosystem. Strong narratives rooted in real people and significant moments in history can find audiences across languages and borders when presented in an engaging format.
While critical appreciation helped ‘G.D.N.’ establish itself during its theatrical run, its response on Netflix has opened up a new chapter for the film. The growing international viewership demonstrates how digital platforms can offer films not merely a “second chance,” but a much larger global stage.
For a figure who once played a significant role in India’s technological history, G.D. Naidu’s story is now reaching a new generation of viewers worldwide through ‘G.D.N.’ — bringing the legacy of one of India’s pioneering innovators back into the spotlight.
