Thursday, September 23
Shadow

பூமிகா திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ஒரு பெரிய இடத்தை பிளாட் போட்டு விற்கும் பெரிய அசைன்மென்ட் ஒன்று கவுதமுக்கு வருகிறது. கவுதம் மற்றும் குடும்பத்தினர் அந்த வீட்டுக்குச் செல்ல, அமானுஷ்யங்கள், ஆபத்துகள் என இரவு நீள்கிறது. வந்திருக்கும் நபர்களின் பின்னணி, அந்த இடம் ஏன் அப்படிச் செயலாற்றுகிறது போன்ற விஷயங்களை வைத்து நவரசா சீரிஸின் ‘இன்மை’ புகழ் ரத்திந்திரன் R பிரசாத் ஒரு பசுமை சார்ந்த (எக்கோ) த்ரில்லரை முன்வைத்திருக்கிறார்.

பல்வேறு புது முகங்களுக்கு இடையே தனித்து நிற்கிறார் சம்யுக்தாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். சைக்காலஜிஸ்ட், குழந்தையின் தாய் என ஐஸ்வர்யா ராஜேஷ் கரியரில் இன்னும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், பாவேல் நவகீதன், நக்கலைட்ஸ் குழு தவிர்த்து படம் முழுக்கவே பல புதுமுகங்கள். கதையின் நாயகன் கவுதமாக விது. கவுதமின் தோழியும் கட்டடக் கலைஞருமான காயத்ரியாக சூர்யா கணபதி. கவுதமின் தங்கை மாதுரியாக அதிதி. அதில் இருவர், ‘பேயா, சரி சரி வா உட்காரு’ டோனில் நடிக்கிறார்கள். இன்னொருவரோ டூ மச் பீதியைக் கிளப்பிக் கடுப்பேற்றுகிறார்.

இரண்டாம் பாதி முழுக்கக் கதையைத் தாங்கி நிற்பது அவந்திகா வந்தனபூ தான். வித்தியாசமான முதல் படம். சவாலான பாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருக்கிறார். அந்த வீட்டின் வேலையாளாக வரும் பாவேல் நவகீதன் மற்றுமொரு நல்ல பாத்திரத்தில் நடித்த திருப்தியுடன் கடந்துபோகிறார்.

பூட்டிக்கிடந்த வீடு என்றாலே பேய் இருக்கும், கரன்ட் போகும், வண்டி ஸ்டார்ட் ஆகாது என நாம் ஒரு லிஸ்ட் போட்டால், அந்த லிஸ்ட்டில் எல்லா பாயின்ட்டுக்கும் டிக் போடும் மற்றுமொரு பேய் படம்தான் ‘பூமிகா’.

“பூமிக்குத் தன்னைக் காப்பாத்திக்கறது எப்படின்னு தெரியும். உன்னைய காப்பாத்திக்க, முடிஞ்சா காப்பாத்திக்க” போன்ற வசனங்கள் அருமை. பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவு அந்த இருள் சூழ்ந்த இரவுகளையும் அவ்வளவு சிரத்தையுடன் படமாக்கியிருக்கிறது. படத்தில் வருகின்ற ஓவியங்களும், அந்த அனிமேஷன்களும் அருமை. கலை இயக்கம் குழுவுக்கு ஒரு சபாஷ். செந்நாய் போன்ற மிருகங்கள் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் உறுத்தினாலும் இந்த பட்ஜெட்டில் அதைச் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ்:
டெக்னிக்கல் காட்சிகள், படத்தில் வருகின்ற ஓவியங்களும், அந்த அனிமேஷன்களும் அருமை. கலை இயக்கம் குழுவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

படத்தின் மைன்ஸ்:
சில இடங்களில் லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் பூமிகா ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகமே.

CLOSE
CLOSE