Tuesday, March 21
Shadow

மும்தாஜ் மற்றும் ஜனனி ஐயர் சண்டை வலுக்கிறது பிக்பாஸ் வீட்டில்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கொடூர மொக்கையாக இருக்கிறது என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களை மோதவிட முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ்.

போட்டியாளர்கள் மோதிக் கொள்ளும் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. முதல் ப்ரொமோ வீடியோவில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை போன்று காட்டியுள்ளனர்.

அவர்கள் மோதிக் கொள்வதை பார்த்து மும்தாஜ் பஞ்சாயத்து செய்கிறார். இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் சமைத்துப் போட்டு போட்டு சோர்வடைந்த மும்தாஜ் இனிமேல் என்னால் முடியாது என்கிறார். ஹவுஸ் கேப்டனான ஜனனிக்கும் நோஸ்கட் கொடுத்துள்ளார் மும்தாஜ். ப்ரொமோ நல்லா தான் இருக்கிறது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம்

இது மட்டும் இல்லாமல் ஜனனி மற்றும் மும்தாஜ் சண்டை நாளுக்கு நாள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது நிகழ்ச்சி முதல் பகுதி போல ஒரு விறு விருப்பு இல்லாததால் சண்டைகள் மூலம் ரசிகர்களை கவர வைக்க நினைக்கும் நிக் பாஸ் என்று தோன்ற வைக்குறது