
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942-ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

கடந்த 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, மோகனாங்க வதனி என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும். மதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார்.

1967ல் வெளியான “கந்தன் கருணை” படத்தில் இசை அமைத்ததற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார. இந்த விருதை பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1969ல் வெளியான “அடிமைப் பெண்” படத்தில் இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருதையும், “சங்கராபரணம்” படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதையும், சுவாதி கிரணம் படத்திற்காக
சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருதையும் வென்றுள்ளார்.
