Tuesday, February 11
Shadow

பிக் பாஸ் சீசன் 2 தொகுத்து வழங்கபோவது யார். தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி எதிர்க்கொண்டாலும், இந்த நிகழ்ச்சிக்காக பலர் அடிமையானது தான் உண்மை.

முதல் சீசன் பெற்ற வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று தொலைக்காட்சி தரப்பில் திட்டமிடப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. பிறகு அரவிந்த்சாமி பெயர் அடிப்பட்டது. ஆனால், இருவரும் அந்த பட்டியலில் இல்லை என்பது தான் உண்மையாம்.

முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.