
பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு
‘ஜனநாயகன்’ முதல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர்களின் அடுத்த பாகங்கள் வரை – திரைப்படங்கள், ஒரிஜினல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், AI கதைகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் என பல்வேறு தளங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ் ZEE5
தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களின் பொழுதுபோக்கு ரசனையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ் ZEE5 தனது இதுவரையிலான மிகப் பிரம்மாண்டமான புதிய உள்ளடக்கத் தொகுப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரும் திரைப்படங்கள், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களின் தொடர்ச்சிகள், புதிய ஒரிஜினல் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான படைப்புகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் கதைகள் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் இந்த புதிய தொகுப்பில் இடம்பெறுகின்றன.
தமிழ் பார்வையாளர்களைப் பொறுத்தவரை சினிமா மற்றும் பொழுதுபோக்கு என்பது திரையில் மட்டுமே முடிந்துவிடும் விஷயம் அல்ல. திரைப்படங்களும், கதாபாத்திரங்களும், நட்சத்திரங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து, பல தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் விஷயங்களாக மாறுகின்றன. இதை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதோடு, அதையும் தாண்டி புதிய அனுபவங்களை வழங்கும் நோக்கில் தமிழ் ZEE5 இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
‘ஜனநாயகன்’ – புதிய தொகுப்பின் முக்கிய ஈர்ப்பு
தமிழ் ZEE5 அறிவித்துள்ள புதிய படைப்புகளில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஜனநாயகன்’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் பயணத்திற்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும், அவரது திரையுலகப் பயணத்தில் முக்கியமான இறுதி திரையரங்கப் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்வதாக தமிழ் ZEE5 தெரிவித்துள்ளது.
‘ஜனநாயகன்’ மட்டுமல்லாமல், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு நட்சத்திரப் படங்களும் இந்த புதிய தொகுப்பில் இடம்பெறுகின்றன.
நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் ‘Hi’, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘Demonte Colony’, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘Savithri’, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘Nooru Kodi Vanavil’, அக்ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப் இணைந்து நடிக்கும் ‘Raawadi’ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.
ரசிகர்களை கவர்ந்த தொடர்களின் அடுத்த அத்தியாயம்
தமிழ் ZEE5-ன் ஒரிஜினல் தொடர்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான சில படைப்புகளின் அடுத்த பாகங்களும் வெளியாக உள்ளன.
‘Koose Munisamy Veerappan 2’, ‘Regai 2’, ‘Vilangu 2’, ‘Thadayam 2’ மற்றும் ‘Sattamum 2’ ஆகிய தொடர்களின் அடுத்த பாகங்கள், இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதே நேரத்தில், புதிய கதைகள் மற்றும் புதிய கதைசொல்லல் முறைகளை அறிமுகப்படுத்தும் வகையில் பல புதிய ஒரிஜினல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Anand Neelakandan நடிப்பில் ‘Ananthakaalam’, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘Mix FM’, Cinemum தயாரிப்பில் ‘Octopus’, Muthukumar, Adithya Joshi மற்றும் Lisha ஆகியோர் இடம்பெறும் ‘Thaai Mann’ உள்ளிட்ட புதிய படைப்புகள் தமிழ் ZEE5-ன் ஒரிஜினல் வரிசையை மேலும் விரிவுபடுத்துகின்றன.
இதனுடன் ‘Thee Kural’ என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியும் பார்வையாளர்களை சென்றடைய உள்ளது.
முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி
இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படைப்பாளர்களுடன் பல்வேறு புதிய மற்றும் தொடர்ச்சியான கூட்டணிகளையும் தமிழ் ZEE5 அறிவித்துள்ளது.
Dheeran Productions, Dream Warrior Pictures, KVM Productions, SS Group, 18 Creators, Cocktail Cinemas, Passion Studios, Seven Screen Studios, Zee Studios, Drumsticks Production, Cinemum LLP மற்றும் Happy Unicorn உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து புதிய படைப்புகளை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ZEE5 தயாராகியுள்ளது.
“தமிழ் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து உயர்த்துவதே எங்கள் நோக்கம்”
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான ZEE5 நிறுவனத்தின் Business Head லாயிட் சேவியர் கூறுகையில்:
“‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தமிழ் ZEE5-க்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இது ஒரு மிகப்பெரிய திரைப்படம் என்பதைக் கடந்து, விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக இருப்பதால், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இது உணர்வுப்பூர்வமான தருணமாக இருக்கும்.
ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்தப் படத்தை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
‘Hi’, ‘Savithri’ போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் முதல் ‘Thadayam’, ‘Koose Munisamy Veerappan’ போன்ற வெற்றிகரமான படைப்புகளின் அடுத்த பாகங்கள் வரை, வெவ்வேறு குரல்கள், கதைகள் மற்றும் கதை சொல்லும் முறைகளைக் கொண்ட உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கொண்டு வருகிறோம். தமிழ் பார்வையாளர்களின் ஆழமான ரசனையும், படைப்பாளர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் தொடர்ந்து புதிய கதைசொல்லல் எல்லைகளை உருவாக்க உதவுகிறது,” என்றார்.
AI தொழில்நுட்பம் முதல் குழந்தைகளுக்கான கதைகள் வரை
திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைத் தாண்டியும், புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பல்வேறு உள்ளடக்கங்களை தமிழ் ZEE5 தனது புதிய தொகுப்பில் இணைத்துள்ளது.
‘Garuda’, ‘Vikram Vetal’, ‘Shiv Sati’, ‘Chandrakanta’, ‘Tirupati Balaji’, ‘Barbarik Narmada’ மற்றும் ‘Ram Anjanay Yudh’ உள்ளிட்ட AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைசொல்லல் படைப்புகளும் இதில் இடம்பெறுகின்றன.
குழந்தைகளுக்காக ‘Kundaka Mandakka’ உள்ளிட்ட பொழுதுபோக்கு படைப்புகளும் இடம்பெறுகின்றன.
விளையாட்டு ரசிகர்களுக்கும் விருந்தாகும் ZEE5
பொழுதுபோக்குடன் விளையாட்டையும் இணைக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய வழங்கலில் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
FIFA, Bundesliga, Coppa Italia, Supercoppa Italiana மற்றும் ILT20 உள்ளிட்ட முக்கியமான சர்வதேச விளையாட்டு போட்டிகளை நேரலையில் காணும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது.
இதன் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், AI கதைகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் என ஒரே தளத்தில் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் நோக்கில் தமிழ் ZEE5 தனது உள்ளடக்கப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது.
தமிழ் பார்வையாளர்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், அவர்களின் பல்வேறு ஆர்வங்களுக்கும் ஏற்ற வகையில் புதிய கதைகள் மற்றும் புதிய வடிவங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்தப் புதிய உள்ளடக்கத் தொகுப்பு அமைந்துள்ளது.
பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான திரைப்படங்கள், ரசிகர்களுக்குப் பிடித்த தொடர்களின் அடுத்த அத்தியாயங்கள், புதிய தலைமுறை படைப்பாளர்களின் முயற்சிகள், தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் என, தமிழ் ZEE5-ன் இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பு தமிழ் டிஜிட்டல் பொழுதுபோக்கின் அடுத்த கட்டத்தை நோக்கிய முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.

Big Stars. Bigger Stories. Tamil ZEE5 Unveils Its Biggest-Ever Content Line-Up
From ‘Jana Nayagan’ to highly anticipated franchise sequels, blockbuster premieres, new originals, reality shows, AI-powered storytelling and live sports, Tamil ZEE5 brings together an expansive slate that reflects the evolving tastes of Tamil audiences.
Tamil ZEE5 has announced its biggest and most diverse content line-up yet, bringing together some of the most anticipated films, original series, franchise sequels, reality formats, children’s entertainment, AI-powered storytelling projects and live sports experiences.
For Tamil audiences, entertainment has always been much more than something watched on a screen. Films, characters and stars often become an integral part of everyday conversations and shared cultural experiences, connecting generations through stories that remain relevant long after their theatrical run. Recognising this deep connection, Tamil ZEE5 continues to focus on delivering stories that not only meet audience expectations but also raise the bar for quality and meaningful storytelling.
‘Jana Nayagan’ Leads the New Content Slate
At the centre of Tamil ZEE5’s latest content line-up is ‘Jana Nayagan’, one of the most eagerly awaited films of the year.
Starring Vijay, the film marks an important milestone in his cinematic journey and has generated significant anticipation among his massive fan base. With the film expected to be his final theatrical outing, ‘Jana Nayagan’ holds a special place among his upcoming releases.
Tamil ZEE5 has expressed its pride in bringing this highly anticipated title to audiences across the world, allowing fans to revisit and relive the experience with their friends and families.
Alongside ‘Jana Nayagan’, the platform has lined up several promising films featuring some of the biggest names in Indian cinema.
The slate includes ‘Hi’, starring Nayanthara and Kavin; ‘Demonte Colony’, featuring Arulnithi and Priya Bhavani Shankar; ‘Savithri’, starring Keerthy Suresh; ‘Nooru Kodi Vanavil’, featuring Harish Kalyan; and ‘Raawadi’, starring Akshay Kumar and Basil Joseph.
Popular Franchises Return With New Seasons
Tamil ZEE5 is also expanding some of its most popular original properties with new seasons and sequels.
Fan-favourites including ‘Koose Munisamy Veerappan 2’, ‘Regai 2’, ‘Vilangu 2’, ‘Thadayam 2’ and ‘Sattamum 2’ are part of the upcoming slate, giving audiences an opportunity to return to some of the stories and formats that have already established a strong following.
The platform is also introducing several new originals featuring fresh ideas, distinctive storytelling and new creative voices.
The upcoming originals include ‘Ananthakaalam’, featuring Anand Neelakandan; ‘Mix FM’, directed by Nelson; ‘Octopus’ from Cinemum; and ‘Thaai Mann’, featuring Muthukumar, Adithya Joshi and Lisha.
Adding further variety to the entertainment offering is ‘Thee Kural’, a new reality format that will expand Tamil ZEE5’s non-fiction content slate.
New Partnerships With Leading Tamil Production Houses
As part of the new content expansion, Tamil ZEE5 has also announced new and continuing collaborations with several leading production houses and creative partners from Tamil Nadu.
The platform is partnering with Dheeran Productions, Dream Warrior Pictures, KVM Productions, SS Group, 18 Creators, Cocktail Cinemas, Passion Studios, Seven Screen Studios, Zee Studios, Drumsticks Production, Cinemum LLP and Happy Unicorn, among others, to bring a wide range of new stories and entertainment experiences to audiences.
Lloyd Xavier: “We Want to Keep Raising the Bar for Tamil Audiences”
Lloyd Xavier, Business Head – Tamil, Telugu and Malayalam at ZEE5, said:
“We are extremely proud to bring ‘Jana Nayagan’ to Tamil ZEE5. Beyond being a major blockbuster, the film holds a special emotional significance for millions of Vijay’s fans as it marks an important chapter in his cinematic journey.
We are delighted to give audiences an opportunity to relive those memorable moments with their friends and families. Alongside ‘Jana Nayagan’, our upcoming content slate brings together a wide range of exciting stories and formats.
From highly anticipated titles such as ‘Hi’, starring Nayanthara and Kavin, and ‘Savithri’, featuring Keerthy Suresh, to new seasons of ‘Thadayam’ and ‘Koose Munisamy Veerappan’ and formats such as ‘Thee Kural’, we are bringing together stories with diverse voices, perspectives and storytelling styles.
The passion and deep connection that Tamil audiences have with content continue to give creators the freedom to experiment boldly and push the boundaries of storytelling.”
AI-Powered Storytelling and Kids’ Entertainment
Tamil ZEE5’s new content offering goes beyond films and original series, exploring newer forms of storytelling powered by technology.
The platform’s slate includes AI-driven storytelling projects such as ‘Garuda’, ‘Vikram Vetal’, ‘Shiv Sati’, ‘Chandrakanta’, ‘Tirupati Balaji’, ‘Barbarik Narmada’ and ‘Ram Anjanay Yudh’.
For younger audiences, the line-up also features children’s entertainment such as ‘Kundaka Mandakka’, further widening the platform’s appeal across age groups.
A Strong Line-Up for Sports Fans
Sports will also form an important part of Tamil ZEE5’s expanded offering.
The platform will bring live sports action from major international competitions, including FIFA, Bundesliga, Coppa Italia, Supercoppa Italiana and ILT20, giving sports enthusiasts access to a diverse range of live sporting experiences.
With films, original series, franchise sequels, reality shows, children’s content, AI-powered storytelling and live sports all coming together, Tamil ZEE5 is strengthening its position as a comprehensive entertainment destination for Tamil audiences.
The new line-up reflects the changing preferences of viewers and the platform’s effort to cater to diverse interests, viewing habits and age groups.
From cinema and fiction to non-fiction, mythology, kids’ entertainment, emerging technologies and live sports, Tamil ZEE5’s latest content slate brings together a wide spectrum of entertainment under one platform, while continuing to explore new stories, formats and possibilities for Tamil audiences.
