பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு
பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு
‘ஜனநாயகன்’ முதல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர்களின் அடுத்த பாகங்கள் வரை – திரைப்படங்கள், ஒரிஜினல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், AI கதைகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் என பல்வேறு தளங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ் ZEE5
தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களின் பொழுதுபோக்கு ரசனையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ் ZEE5 தனது இதுவரையிலான மிகப் பிரம்மாண்டமான புதிய உள்ளடக்கத் தொகுப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரும் திரைப்படங்கள், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களின் தொடர்ச்சிகள், புதிய ஒரிஜினல் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான படைப்புகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் கதைகள் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் என பல்வேறு வகையான உ...


