Friday, January 17
Shadow

விஜய் சினிமா வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாகிறது பிகில்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் விஜய் சினிமா வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்று பெயர் பெற்றுள்ளது.

அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது