
மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி பெண்களின் முழுமையான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் ZOY!
சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் நடிகை சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட வல்லுநர்கள் பங்கேற்பு
பெண்களின் ஆரோக்கியம் என்பது மாதவிடாய் காலப் பராமரிப்புடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், பாதுகாப்பான சுகாதாரப் பொருட்களின் பயன்பாடு என பெண்களின் ஒட்டுமொத்த உடல்நலத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற தலைப்பில் பெண்களின் உடல்நலம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் ZOY நிறுவனத்தின் இணை நிறுவனரும் நடிகையுமான சமந்தா ரூத் பிரபு, நிறுவனத்தின் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஃபிட் செஃப் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நலப் பயிற்சியாளரான ஷிதிஜா நஹதா, விளையாட்டு மற்றும் முழுமையான தடுப்பு உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன், மகளிர் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் நரசா நாராயணி ஆகியோரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அந்தரங்கப் பகுதியின் சுகாதாரத்தைப் பேண வேண்டியதன் அவசியம், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து மற்றும் வயதுக்கு ஏற்ப பெண்களின் உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு, உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
ZOY நிறுவனத்தின் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி பேசுகையில், ஜவுளித் துறையில் தனக்கிருந்த 16 ஆண்டுகால அனுபவம் பெண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள உதவியதாகக் குறிப்பிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பான, தரமான மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ZOY நிறுவனத்தைத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகையும் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சமந்தா ரூத் பிரபு பேசுகையில், பெண்கள் தங்களது உடல்நலம் குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றாடம் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிந்துகொண்டு, தங்களுக்குப் பொருத்தமான பொருட்களைச் சிந்தித்துத் தேர்வு செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் மாதவிடாய் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மூலிகைகள் சேர்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், பாக்டீரியா எதிர்ப்புத் தொழில்நுட்பம் கொண்ட நாப்கின்கள், மூலிகை வெல்னஸ் லைனர்கள், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ZOY நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதவிடாய் காலத்தில் மட்டுமல்லாமல், பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், பாதுகாப்பான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என ZOY நிறுவனம் தெரிவித்துள்ளது.

ZOY Takes a Holistic Approach to Women’s Health, Going Beyond Menstrual Care
Actress Samantha Ruth Prabhu and leading health and wellness experts participate in a special panel discussion at The Leela Palace, Chennai
Women’s health extends far beyond menstrual care. Hormonal balance, intimate hygiene, nutrition, the safety of menstrual products and the health changes women experience at different stages of life are all essential aspects of overall well-being. With the aim of promoting greater awareness of these concerns, ZOY has launched an initiative focused on a more holistic approach to women’s health.
The event, held at The Leela Palace in Chennai, featured a panel discussion titled ‘Wellness Beyond Your Period’, bringing together experts from healthcare, nutrition, sports and wellness to discuss key aspects of women’s health and the importance of making informed choices.
The discussion was attended by Samantha Ruth Prabhu, actress and co-founder of ZOY; Maheshwari Moorthy, founder of ZOY; and Vidya Ramraj, an Asian Games gold medallist in athletics. Other participants included Shitija Nahata, founder of Fit Chef and a nutrition and wellness coach; Shiny Surendran, a sports and holistic preventive dietitian; and leading gynaecologists Dr. Padma Ramakrishnan and Dr. Narasa Narayani.
The panel explored several important topics, including hormonal balance, intimate hygiene, the safety of menstrual care products, proper nutrition and the physical changes women experience at different stages of life. The discussion highlighted the importance of understanding one’s body, recognising health-related changes and making informed decisions to support long-term well-being.
Speaking about the vision behind the brand, ZOY founder Maheshwari Moorthy shared that her 16 years of experience in the textile industry helped her understand the needs of women and inspired her to establish the company. She said the brand was founded with the aim of providing women with safe, high-quality menstrual care products.
Samantha Ruth Prabhu, actress and co-founder of ZOY, emphasised the importance of women becoming more aware of their health and the products they use. She encouraged women to understand the quality and safety of personal hygiene products and make thoughtful, informed choices that suit their individual needs.
As part of its product portfolio, ZOY offers a range of menstrual care solutions, including herbal-infused sanitary napkins, antibacterial sanitary napkins, herbal wellness liners, disposable and reusable period panties, and reusable menstrual cups.
Through this initiative, ZOY aims to broaden the conversation around women’s health beyond menstrual care, placing greater emphasis on overall wellness, awareness and the importance of choosing products with care. The initiative reflects the brand’s commitment to encouraging women to prioritise their health and well-being at every stage of life.
