Friday, October 4
Shadow

தளபதியின் பிகில் படத்திலில் மேலும் சிறக்க இணைந்த பிரபல செய்தியாளர்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய், வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியதிலிருந்து ரசிகர்கள் அந்த பாடலுக்காக தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தில் தனது பணிகளை நிறைவு செய்த விஜய், படத்தில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன் படி, இந்த படத்தில் ஆனந்தராஜ், விவேக், சன் டிவி ஈவெரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளவிருக்கும் படப்பிடிப்பு டெல்லியில் வருகிற ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.