

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக இதோ அதோ என்று இழுபறியில் இருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா சமீபத்தில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தவர் இயக்குனர் ஹீரோ சசிகுமார் இவர் இந்த படத்துக்கான புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
சுந்தரபாண்டியன் படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் நடிகர் சசிகுமார் இணைந்திருக்கும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இந்த படத்தை இந்தேர் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் சசிகுமார் பிரபல இனியதளத்திற்கு கொடுத்த பேட்டியில் அப்போது பேசிய அவர், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷிற்கு அண்ணனாக நடித்துள்ளேன். சின்ன கேரக்டர் தான். இயக்குநர் கௌதமுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
ரொம்ப கூலா வேலை பண்ணோம். பாம்பேல 3 நாள் ஷூட் இருந்தது. அப்போது இந்த படம் செப்டம்பர் ரிலீஸ் ஆவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, கண்டிப்பா வந்துடும். நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஒன்றொன்றாக சரியாகிக்கொண்டு வருகிறது.என்னமோ ஒரு வழியாக படம் வெளியானால் சரி தான் ரசிகர்கள் நீண்டகாலமாக காத்து இருக்கிறார்கள்.
