Wednesday, October 28
Shadow

பிகில் படத்தை திரையிட மறுக்கும் திரையரங்கங்கள்

விஜய் படம் என்றாலே ரிலிஸ் நேரங்களில் எதாவது பிரச்னை வருவது ஒன்றும் புதிலில்லை அந்த வகையில் இந்த படத்துக்கு பலவிதங்களில் பிரச்சனைகள் தொடர்கிறது.பொதுவாக கதை பிரச்சனை வருமான சோதனை இப்படி வரும் அதையெல்லாம் மிகவும் சுலபமாக சமாளித்து விடலாம் அனால் இந்த முறை திரையரங்க உரிமையாளர்கள் ஒரு சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரு படங்களும் அக்டோபர் 25 அன்று ரிலீஸாகின்றன. இரண்டு படங்களுக்கும் நேற்றைய தினம் முதல் தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 550 திரைகளில் பிகில் படமும், 275 திரைகளில் கைதி படமும் திரையிடுவதற்காக படத்தை வாங்கிய ஏரியா விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி அக்டோபர் 24 இரவு வரை தொடரும் பண்டிகை காலம் மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் நாட்களில் முதல் நாள் அதிகாலை காட்சி, நள்ளிரவு காட்சி என்று சிறப்பு காட்சிகள் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்படும்.

முதல் நாள், முதல் காட்சி தனது அபிமான நடிகரின் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா நடிகர்களுக்கும் தனியாக ஒரு கூட்டம் தமிழகத்தில் உண்டு. இவர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும் திரையரங்குகள் தங்களுக்கு சாதகமாக வசூல் வேட்டை நடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வது காலம் காலமாக நடந்து வருகிறது.

முதல் நாள் படம் பார்ப்பதற்கு என்ன விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் தீவிரமான முயற்சி மேற்கொள்வார்கள். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் 70% டிக்கெட்டுகளை திரையரங்கு மேனேஜர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக் கொள்வது நடைமுறையில் உள்ளது.